ஓவரா யோசிச்சா உடம்புக்கு ஆகாது.. விஜய் தேவர்கொண்டா டேட்டிங் விவகாரத்தில் பதிலளித்த ராஷ்மிகா

தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்தாலும் குறுகிய காலத்தில் அதிக ரசிகர்களை பெற்றுள்ளார் ராஷ்மிகா மந்தனா. மேலும் விஜய் உடன் நடிக்க வேண்டும் என்ற அவருடைய வாழ்நாள் ஆசையும் வாரிசு படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது. ராஷ்மிகாவை தொடர்ந்து சர்ச்சை சூழ்ந்து கொண்டே இருக்கிறது.

அதாவது விஜய் தேவர்கொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் டேட்டிங் செய்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. அதாவது இவர்கள் அடிக்கடி ஒரே இடத்தில் உள்ள புகைப்படங்களை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். இதனால் ரசிகர்களுக்கு சந்தேகம் அதிகப்படியாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

இப்போது பிரபல ஊடகம் ஒன்றில், ராஷ்மிகா மற்றும் விஜய் தேவர் கொண்டா டேட்டிங் செய்வது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது ராஷ்மிகாவின் கையில் விஜய் தேவர் கொண்டாவின் விருப்பமான மோதிரம் உள்ளதாகவும், இருவரும் ஒரே ஹோட்டலில் தங்கியுள்ளதாகவும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இதை டேக் செய்து ராஷ்மிகா, ஐயோ ரொம்ப யோசிக்க வேண்டாம் என பதில் அளித்துள்ளார். ஏதாவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல விஜய் தேவர்கொண்டா, ராஷ்மிகா டேட்டிங் செய்வது அப்பட்டமாக தெரிகிறது. அதை இல்லை என்று ராஷ்மிகா நிரூபிக்க முயற்சி செய்கிறார்.

அதுமட்டுமின்றி இவர்கள் இருவரின் விடுமுறை நாட்களை ஒரே இடங்களில் கொண்டாடுவது குழப்பத்தை தான் ஏற்படுத்துகிறது. மேலும் விரைவில் ரஷ்மிகாவே தங்களுக்குள் இருக்கும் உறவை வெட்ட வெளிச்சமாக சொல்வார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ராஷ்மிகா தற்போது தன்னுடைய படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

அதாவது சமந்தா நடிக்க வேண்டி இருந்த ரெயின்போ என்ற படத்தில் ராஷ்மிகா நடிக்க இருக்கிறார். இப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக எடுக்கப்பட்ட உள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்க உள்ளது.