கையும் களவுமாக மாட்டிக்கொண்ட ராஷ்மிகா.. போட்டோ எடுத்த பத்திரிகையாளர்கள்

தெலுங்கு பட உலகிலும் கொடி கட்டி பறக்கும் நடிகைகளுள் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிற்கு அறிமுகமானவர் ராஷ்மிகா. என்னதான் இவர் கன்னட சினிமாவில் அறிமுகமானாலும், தெலுங்கு சினிமா தான் இவருக்கு பேரும் புகழும் பெற்றுத்தந்தது.

ராஷ்மிகா, விஜய் தேவர்கொண்டா உடன் 2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் தெலுங்கு மட்டுமின்றி, தமிழ் ரசிகர்களிடம் நன்கு பிரபலம் அடைந்தார். குறிப்பாக அதில் இடம் பெற்ற ஒரு பாடலுக்கு இடுப்பை காட்டியபடி சேலையை சரி செய்வார். இந்த காட்சி இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சமீபகாலமாக ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவர் கொண்டாவும் காதல் உறவில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. இருவரும் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் சுற்றுலாவிற்காக பாரிஸ் சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி ஹைதராபாத்திலும் ஒன்றாக ஊர் சுற்றி, தங்கள் காதலை வளர்த்து வருகின்றனர்.

Rashmika-Vijaydevarkonda-
Rashmika-Vijaydevarkonda-

இந்நிலையில் ஹைதராபாத் ஹோட்டலில் இருவரும் ஒன்றாக தங்கியுள்ளனர். அந்த ஹோட்டலை விட்டு வெளியே வரும்போது பத்திரிகையாளர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டனர். இதிலிருந்து அவர்கள் இருவரும் காதல் உறவில் இருப்பது வெளிப்படையாக தெரிகிறது.

கூடிய விரைவில் இவர்களது காதலை அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் என்று சினிமா உலகில் பரபரப்பாக பேசி வருகின்றனர்.