காதலருடன் ரகசியமாக பாரிஸ் சென்றுள்ள ராஷ்மிகா.. ஓஹோ! அப்படியா விஷயம்!

இந்திய சினிமாவின் முன்னணி நடிகை என பெயர் பெற்றுள்ளார் ரஷ்மிகா மந்தனா. நாளுக்கு நாள் இவருக்கு மவுசு கூடிக் கொண்டே செல்கிறது. அதுமட்டுமில்லாமல் வடக்கில் இருந்து தெற்கு வரை இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

நிக்க கூட நேரமில்லாத அளவுக்கு கைவசம் பல படங்கள் வைத்து நடித்துக்கொண்டிருக்கும் ரஷ்மிகா மந்தனா திடீரென ரகசியமாக பாரிஸ் டூர் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் சும்மா போய் இருந்தால் பரவாயில்லை. அதே ஊருக்கு, அதே நேரத்தில், அவருடைய காதலர் என கிசுகிசுக்கப்பட்டவருடன் சென்றது தான் தற்போது தெலுங்கு சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவில் நடிக்கும் போது, அங்கு ஒருவரை காதலித்து வந்தார் என்பது தெரிந்ததே. நிச்சயதார்த்தம் வரை சென்ற அந்த காதல் திருமணத்தில் முடியவில்லை. கடைசி நேரத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

அதன்பிறகு தெலுங்கு சினிமாவில் சரித்திரம் படைக்கத் தொடங்கிய ரஷ்மிகா மந்தனாவுக்கு ஆரம்பமே அட்டகாசம் அமைந்த திரைப்படம் கீதா கோவிந்தம். இந்த படத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக விஜய் தேவர்கொண்டா நடித்திருந்தார்.

இந்த படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் என வதந்திகள் கிளம்பிய நிலையில் தற்போது அதை உறுதி செய்யும் விதமாக இருவரும் பாரிஸில் தனிமையில் சந்தித்து உள்ளதாக, அக்கட தேசத்தில் இருந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. முதலில் மும்பையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஷ்மிகா முதலில் பாரிஸ் சென்றுள்ளார்.

அதேபோல் விஜய் தேவர்கொண்டாவும் தன்னுடைய படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஷ்மிகா போன அடுத்த சில மணி நேரங்களிலேயே அவரும் பாரிஸ் சென்று விட்டாராம். தற்போது இருவரும் ஒரே நாளில் ஹைதராபாத் வந்து இறங்கிய நிலையில், இருவரது காதலும் உறுதி என்கிறது அக்கட பத்திரிக்கை வட்டாரம். ஆனால் அவர்களைக் கேட்டால் “வி ஆர் ஜஸ்ட் பிரண்ட்ஸ்” என கடந்து விடுகிறார்கள்.