அடர்ந்த காட்டில் ஜிம் வொர்க் அவுட் செய்யும் ராசி கண்ணா..

இமைக்கா நொடிகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ராஷி கண்ணா. இப்படம் ஓரளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது ரசிகர்களுக்கு தெரியக்கூடிய நாயகியாக ராசி கண்ணா பிரபலமானார்.

அதன் பிறகு வெளியான அடங்க மறு, சங்கத்தமிழன் மற்றும் அயோக்கியா போன்ற திரைப்படங்கள் எதுவுமே எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

என்னதான் படங்கள் வெற்றி பெறாமல் இருந்தாலும் ராசி கண்ணாவிற்கு தெலுங்கிலும் சரி, தமிழிலும் சரி அதிகமான பட வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

தற்போது இவரது நடிப்பில் துக்ளக் தர்பார், அரண்மனை 3 போன்ற தமிழில் மட்டும் நான்கு படங்கள் கைவசம் உள்ளன. பல படங்கள் கையில் வைத்திருக்கும் ராசி கண்ணா உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கு உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அடர்ந்த காட்டில் ஜிம் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ராசிக்கான உடலில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார் என்று பாராட்டி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்