19ஆம் நூற்றாண்டின் சொல்லப்படாத வரலாறு.. விக்ரமின் நடிப்பை பற்றி ஓப்பனாக பேசிய பா ரஞ்சித்

பா ரஞ்சித் இப்போது நடிப்பு அரக்கனான விக்ரமை வைத்து தங்கலான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த திரைப்படம் இடைவிடாது ஷூட்டிங் செய்யப்பட்டு வருகிறது. கோலார் தங்க சுரங்கத்தில் வாழ்ந்த மக்களின் சொல்லப்படாத வரலாறாக இந்த திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே கோப்ரா பட தோல்வியால் துவண்டு போயிருந்த விக்ரம் இந்த திரைப்படத்திற்காக ரொம்பவும் மெனக்கெட்டு வருகிறாராம். அதை பா ரஞ்சித் இப்போது ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதாவது இந்த படத்தில் விக்ரமின் கதாபாத்திரத்திற்காக மேக்கப் போடுவதற்கு மட்டுமே கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஆகுமாம்.

Also read: கமல், விக்ரம், சிவாஜி அளவுக்கு தாக்குப் பிடிப்பாரா சூர்யா? வெறித்தனமாக இறங்கும் சிவாவின் படக்குழு

அந்த அளவுக்கு அவர் தன்னுடைய தோற்றத்தை முற்றிலுமாக வேறுபடுத்தி காட்டி இருக்கிறாராம். இது குறித்து ஏற்கனவே போஸ்டர்கள் வெளிவந்தது. அது மட்டுமல்லாமல் 19ஆம் நூற்றாண்டு மக்களை அப்படியே கண்முன் காட்டும் அளவுக்கு அவருடைய நடிப்பு பிரம்மிப்பாக இருப்பதாகவும், அதற்காக விக்ரம் ரொம்பவே ரிஸ்க் எடுத்துள்ளதாகவும் ரஞ்சித் வியந்து போய் கூறி இருக்கிறார்.

தற்போது ஈவிபியில் ஷூட்டிங் நடந்து வரும் இப்படம் அடுத்ததாக கே ஜி எஃப், பூனே போன்ற இடங்களிலும் ஷூட்டிங் நடத்தப்பட இருக்கிறதாம். மேலும் இந்த படத்தின் கதைகளம் வரலாறு சம்பந்தப்பட்டதாக இருப்பதால் அவ்வளவு எளிதில் இப்படத்தை எடுத்து விட முடியாது என்றும் முடிந்த அளவுக்கு நாங்கள் அதை மக்களுக்கு சிறப்பாக கொடுக்க முயற்சிக்கிறோம் என்றும் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Also read: வளர்த்துவிட்ட வரை அசிங்கப்படுத்திய சூர்யா, விக்ரம்.. போறாத காலம் கழுகு போல் கொத்தும் அவலம்

விக்ரம் மட்டுமல்லாமல் படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் டெக்னிசியன்கள் அனைவரும் கடின உழைப்பை இந்த படத்திற்காக போட்டிருக்கிறார்களாம். அந்த வகையில் இந்த தங்கலான் நிச்சயம் ஆடியன்ஸை கவரும் வகையில் இருக்கும் என்று தெரிவித்த ரஞ்சித் விரைவில் அடுத்த அப்டேட்டை கொடுப்பதாகவும் கூறி இருக்கிறார்.

அவர் இப்படி மகிழ்ச்சியாக பேசுவதில் இருந்தே விக்ரம் எந்த அளவுக்கு அவரை இம்ப்ரஸ் செய்திருக்கிறார் என்று தெரிகிறது. ஒரு படைப்பாளி எழுதுவதை நடிப்பின் மூலம் கண்முன் கொண்டு வருவது தான் ஒரு நடிகனின் கடமை அதை இந்த படத்தில் விக்ரம் பூர்த்தி செய்து இருக்கிறார் என்றே தோன்றுகிறது. அந்த வகையில் இந்த படத்திற்கான ஆர்வம் தற்போது அதிகரித்திருக்கிறது.

Also read: சேது படத்தில் முதல் சாய்ஸ் விக்ரம் இல்லையாம்.. பாலாவை டீலில் விட்ட நடிகர்

- Advertisement -