வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பா ரஞ்சித் கொடுத்த தங்கலான் அப்டேட்.. சிங்கிளாக வசூல் வேட்டையாட வரும் விக்ரம்

பா ரஞ்சித், விக்ரம் கூட்டணியில் தங்கலான் படம் உருவாகி வருகிறது. இப்படம் 1870 ஆம் ஆண்டிலிருந்து 1940 ஆண்டு வரை கோலார் தங்க சுரங்கத்தில் நடந்த நிகழ்வை படமாக எடுத்து வருகின்றனர். கோலார் தங்க சுரங்கத்தில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளை பா ரஞ்சித் படமாக்கி உள்ளாராம்.

அங்கு கிட்டத்தட்ட 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாம். மேலும் 25 நாட்கள் படப்பிடிப்பு மட்டும் மீதம் இருப்பதாக இயக்குனர் கூறி உள்ளார். மேலும் இந்த படத்தின் முழு படப்பிடிப்பு வருகின்ற மே மாதத்திற்குள் முடிவடையும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய்யின் லியோ உடன் தங்கலான் படம் மோத உள்ளதாக தகவல் வெளியானது.

Also read: கமலின் கனவு படத்தில் நடிக்க துணிந்த விக்ரம்.. உண்மையை போட்டுடைத்த விக்ரம் பட ஏஜென்ட்

ஆனால் இப்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது தங்கலான் படத்தின் படப்பிடிப்பு மே மாதமே முடிவு பெற்றாலும், படத்தில் சி ஜி மற்றும் விஎஃப்எக்ஸ் வேலைகள் நிறைய இருக்கிறதாம். இதற்கு நிறைய நேரம் தேவைப்படுவதாக படக்குழு தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

ஆகையால் அக்டோபர் மாதம் தங்கலான் படத்தை ரிலீஸ் செய்வது மிகவும் கடினம். இதனால் இந்த வருட இறுதியில் தங்கலான் படம் வெளியாகும் என இயக்குனர் பா ரஞ்சித் செய்தியாளர் சந்திப்பில் கூறி உள்ளார். ஆகையால் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தங்கலான் படம் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது.

Also read: தங்கலான் படத்திற்கு பின் அடுத்த பட இயக்குனரை லாக் செய்த விக்ரம்.. மகனால் தந்தைக்கு அடித்த ஜாக்பாட்

இதனால் டாப் நடிகர்களின் படங்கள் இதற்கு முன்னதாகவே வெளியாகி விடுகிறது. மேலும் கமலின் இந்தியன் 2 படமும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தான் ரிலீஸ் ஆகிறது. இதனால் எந்த போட்டியும் இல்லாமல் சிங்கிளாகவே விக்ரமின் தங்கலான் படம் வெளியாக இருக்கிறது. இப்போது இந்த படத்தின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

காரணம் படத்தின் கதை மற்றும் விக்ரமின் வித்தியாசமான கெட்டப் தான். மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு தான் பா ரஞ்சித் தொடர்ந்து படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் தங்கலான் படமும் ஒரு சிறந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் விரைவில் ரிலீஸ் செய்தியுடன் படக்குழு ரசிகர்களை சந்திக்கும்.

Also read: முதல் படத்திலேயே வெற்றி கண்ட 6 இயக்குனர்கள்.. விக்ரமை பைத்தியமாக அலையவிட்டு ஹிட் கொடுத்த பாலா

- Advertisement -

Trending News