ராகவா லாரன்ஸை நம்பி அந்த படத்தை கொடுக்க முடியாது.. பயந்துபோய் பின்வாங்கி ராம்சரண்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ராம் சரண் தமிழிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படம் தமிழில் மிகப் பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து தெலுங்கு நடிகர்கள் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்து விட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மகேஷ்பாபு ஏற்கனவே என்ட்ரி கொடுத்து விட்டார்.

அதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடித்த அளவைகுண்டபுரம்லோ படம் வைகுண்டபுரம் என்ற பெயரில் சன் டிவியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. முன்னணி நடிகர்களின் படங்களை போல அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இவர்களைத் தொடர்ந்து அடுத்ததாக ராம்சரண் சங்கர் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ராம்சரண் நடித்த பல தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளன. அந்த வகையில் அடுத்ததாக அவரது சூப்பர் ஹிட் படம் ஒன்று வரிசையில் உள்ளது.

ராம்சரண் மற்றும் சமந்தா கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ரங்கஸ்தலம். மொழி புரியவில்லை என்றாலும் பல தமிழ் ரசிகர்களுக்கு இந்த படம் விருப்பமான ஒன்று. இந்த படத்தை தமிழில் முன்னதாக ராகவா லாரன்ஸ் ரீமேக் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் ராகவா லாரன்ஸின் சமீபத்திய திரைப்படங்களில் பார்த்த ராம்சரண் அவரிடம் கொடுத்தால் இந்த படத்தை நாசமாக்கி விடுவார் என தானே முன்வந்து தமிழில் இந்த படத்தை டப் செய்யலாமென தயாரிப்பு நிறுவனத்திற்கு ஐடியா கொடுத்துள்ளாராம். இந்நிலையில் மே மாதம் திரையரங்குகளில் ரங்கஸ்தலம் படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

rangasthalam-tamil-dubbed
rangasthalam-tamil-dubbed
- Advertisement -