வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

என்னையே உத்து பார்த்தேன் என்ன விட கெட்டவன் யாரும் இல்ல.. மிரட்டும் ரன்பீர் கபூரின் அனிமல் டீசர்

Animal Teaser: பாலிவுட்டின் அமுல் பேபி, சாக்லேட் பாய் என்று கொண்டாடப்படும் ரன்பீர் கபூரின் அனிமல் டீசர் தற்போது வெறித்தனமாக வெளியாகி உள்ளது. சந்தீப் ரெட்டி இயக்கத்தில் அனில் கபூர், பாபி தியோல், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் இதில் நடித்திருக்கின்றனர்.

வரும் டிசம்பர் 1ம் தேதி வெளிவர இருக்கும் இப்படம் ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ளது. அதன்படி டீசரின் ஆரம்பத்திலேயே ரன்பீர், ராஷ்மிகாவிடம் நான் ஒரு நல்ல அப்பாவாக இருக்க விரும்புகிறேன் என்று கூறுகிறார்.

Also read: நானும் உறவில் இருக்கிறேன், ராஷ்மிகா முன்னாள் காதலனின் புகைப்படம்.. கடுப்பில் விஜய் தேவரகொண்டா

அதற்கு அவர் உங்களுடைய அப்பா போல் இருக்க விரும்ப மாட்டீர்கள் தானே என்று கேட்கிறார். இதிலிருந்தே ரன்பீரின் அப்பாவான அனில் கபூர் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்று தெரிகிறது. அதை தொடர்ந்து அவர் தன் மகனை நன்றாக வளர்க்கிறேன் என்ற பெயரில் கண்டிப்புடன் நடந்து கொள்கிறார்.

இருந்தாலும் தன் அப்பா மேல் நம்பிக்கை வைத்திருக்கும் ஹீரோ ஒரு கட்டத்தில் அரக்க குணம் கொண்ட ரவுடியாக மாறுகிறார். அதிலும் கெட்டதை தேடி நான் போனேன், அது என் கண்ணுல படல. என்னையே நான் உத்து பார்த்தேன் என்ன விட கெட்டவன் யாரும் இல்லை என்ற வசனமே மிரட்டலாக இருக்கிறது.

Also read: ஹோம்லி லுக்கில் ஸ்கோர் செய்த நேஷனல் கிரஷ் ராஷ்மிகா.. காட்டுத்தீயாய் பரவும் அனிமல் பட போஸ்டர்

அதை தொடர்ந்து வெறித்தனமாக ரத்தம் தெறிக்கும் பல காட்சிகள் இடம்பெறுகிறது. அந்த வகையில் சாக்லேட் பாய் முகத்திற்குள் இருக்கும் இன்னொரு அவதாரத்தை ரன்பீர் கபூர் காட்டி இருக்கிறார். இப்படியாக ஆக்ரோஷத்துடன் வெளிவந்துள்ள இந்த டீசர் தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

Trending News