வேலையை காட்டிய ரம்யா பாண்டியன்.. வருத்தத்தில் பிக்பாஸ் சோம் சேகர்.. நடிகைன்னு காட்டிட்டாங்க!

சமீபத்தில் விஜய் டிவியில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ் சிவானி காதலை தொடர்ந்து அடுத்து பிரபலமாக பேசப்பட்ட காதல் ஜோடி என்றால் அது சோம் சேகர் மற்றும் ரம்யா பாண்டியன் காதல் தான்.

இருவரும் மிக நெருக்கமாக பழகி வந்தனர். பாலாஜி சிவானி அளவுக்கு இல்லை என்றாலும் இருவருக்குள்ளும் ஒரு புரிதல் இருந்தது போன்று மக்களுக்கு தோன்றியது. இதனால் ரம்யா பாண்டியன் ஆதரவாளர்கள் சோம் சேகருக்கு சப்போர்ட் செய்து வந்தனர்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோம் சேகர் ரம்யா பாண்டியனை நினைத்து மிகவும் உருகி உருகி பதிவுகள் வெளியிட்டு வந்தார் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். ஆனால் ரம்யா பாண்டியன் அந்த காதல் கதைக்கு ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நேரடியாக ரம்யா பாண்டியன் உரையாடி வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் சோம் சேகருக்கும் உங்களுக்கும் எப்போது திருமணம் என்ற கேள்வியை கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ந்து போன ரம்யா பாண்டியன், சோம் சேகர் எனக்கு நல்ல நண்பர் தான் எனவும், மற்றவர்களிடம் எப்படி சகஜமாக பழகினேனோ அப்படித்தான் சோமசேகரிடமும் பழகினேன் என கூறிவிட்டார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத சோம் சேகர் தற்போது வருத்தத்தில் இருக்கிறாராம்.

ramyapandian-somsekar-cinemapettai-01
ramyapandian-somsekar-cinemapettai-01

கடைசியில் நடிகை புத்தியை காண்பித்து விட்டார் என தன்னுடைய நெருங்கிய வட்டாரங்களில் கூறி புலம்பி வருகிறாராம். ஒருவேளை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யா பாண்டியன் பட வாய்ப்புகள் இல்லை என்றால் சோம் சேகரை திருமணம் செய்து கொள்ள அதிக வாய்ப்பு இருந்ததாம். ஆனால் தற்போது படவாய்ப்புகள் குவிவதால் அவசரப்பட்டு காதல் திருமணம் செய்து கேரியரை இழக்க வேண்டாம் என ரம்யா பாண்டியன் முடிவு செய்து விட்டதாக தெரிகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்