சோம் சேகருடன் உள்ள உறவை வெளிச்சம் போட்டு காட்டிய ரம்யா பாண்டியன்.. வாயில் விரல் வைத்த நெட்டிசன்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் முடிவு பெற்றது. மேலும் காதல் ட்ராக்கை எப்படியாவது கிரியேட் செய்ய வேண்டும் என்ற பிக் பாஸ் எண்ணம் தோல்வியில் முடிவடைந்தது.

ஏனென்றால் பிக் பாஸ் சீசன் 4 ஆரம்பித்தபோது கேபி- பாலா இடையே முடிச்சு போடப் பார்த்த குழுவினர், அது கைக்கு எட்டாத பின்னர் ஷிவானி- பாலா இடையே போட்டு பார்த்தனர். ஆனால் அதுவும் கைகூடவில்லை.

இருந்தபோதிலும் ரம்யா பாண்டியனுக்கும் சோம் சேகருக்கும் இடையே நெட்டிசன்கள் முடிச்சு போட ஆரம்பித்து, இருவருக்கிடையே இருந்த சாக்லேட் மேட்டரை ஊதிப் பெரிதாக்கினர்.

அதுமட்டுமில்லாமல், ஃப்ரீஸ் டாஸ்கின் போது பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ரம்யா பாண்டியனின் சகோதரர், சோம் சேகரை மச்சான் என்று கூப்பிட்டது இணையத்தில் பேசுபொருள் ஆனது. அதேபோல், சமீபத்தில் சோம் சேகரும் ரம்யாவும் மணக்கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரல் ஆனது.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் லைவ் சாட்டில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்த ரம்யா பாண்டியன், தனக்கும் சோம்க்கும் இடையே உள்ள உறவை பற்றி தெளிவாக கூறியிருக்கிறார்.

som sekhar ramya pandian
som sekhar ramya pandian

அதாவது ரம்யாவிடம் ரசிகர் ஒருவர், ‘சோமுக்கும் உங்களுக்கும் என்ன உறவு?’ என்று கேட்க, அதற்கு ரம்யா, ‘தனக்கு சோம் ஒரு நல்ல நண்பர் என்றும், அதைத் தாண்டி இருவருக்கு இடையே வேறு எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். ரம்யா பாண்டியனின் இந்தப்பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ramya-pandian-som-love-cinemapettai
ramya-pandian-som-love-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்