வெடக்கோழி ஆக மாறிய ரம்யா பாண்டியன்.. இணையத்தை வெளுத்து வாங்கிய புகைப்படம்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் ரம்யா பாண்டியன் காட்டில் அடைமழை பெய்து கொண்டிருக்கிறது. பட வாய்ப்புகளையும் தாண்டி போட்டோ ஷூட் செய்ய ஏகப்பட்ட வாய்ப்புகள் வருகின்றன.

வாரத்திற்கு குறைந்தது இரண்டு போட்டோ ஷூட்டாவது கிடைத்துவிடுகிறது. இதிலேயே நல்ல பில் போட்டு நன்றாக சம்பாதித்து வருகிறார் ரம்யா பாண்டியன். போகிற போக்கை பார்த்தால் நமக்கு இதுவே போகும் என முடிவு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சூர்யா தயாரிக்கும் ஒரு படத்தில் வாணி போஜனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இன்னொரு படத்திலும் ஒப்பந்தமானதாக தகவல் வந்தாலும் உறுதி செய்யப்படவில்லை.

பிக்பாஸ் வீட்டிற்குச் செல்லும் முன்னரே ஆண்தேவதை, ஜோக்கர் போன்ற சில படங்களில் நாயகியாக நடித்தார். இருந்தாலும் இவரது முதிர்ச்சியான முகத்தோற்றம் இவருக்கு பட வாய்ப்புகளை வாங்கித் தரவில்லை.

இதனால் சோகத்தில் இருந்த வரை விஜய் டிவி கூட்டிச்சென்று சொர்க்கத்தைக் காட்டி உள்ளது. ரம்யா பாண்டியன் கலந்து கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளும் சூப்பர் ஹிட்டடித்தது.

சமீபத்தில் ரம்யா பாண்டியன் தனது சொந்த ஊருக்கு போனது போல் தெரிகிறது. அங்கே வெடக்கோழி உடன் அவர் கொடுத்த போஸ் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

ramya-pandian-cinemapettai
ramya-pandian-cinemapettai
- Advertisement -