நீச்சல் உடையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

நீலாம்பரியாகவும் ராஜமாதா சிவகாமி தேவியாகவும் எடுத்த கதாப்பாத்திரத்திற்கு சரியாக சேர்ந்து தனது நேர்த்தியை உலகுக்கு எடுத்துக்காட்டுபவர் ரம்யா கிருஷ்ணன்.

தமிழில் “வெள்ள மனசு” படத்தின் மூலம் அறிமுகமானவருக்கு பெரிய நடிகர்களோடு நடிக்கும் வாய்ப்பு மிக மிக குறைவு. கேப்டன் பிரபாகரனின் ஆட்டமா தேரோட்டமா பாடலின் வழியே ஒற்றைப்பாடல் குத்து டான்ஸர்களை தூக்கி சாப்பிட்டவர் ரம்யா கிருஷ்ணன்.

தமிழ் மலையாளம் தெலுங்கு என 200 படங்களுக்கு மேலாக நடித்திருக்கும் நீலாம்பரி. படையப்பா படத்தின் மாஸ் வில்லியாக அவதாரம் எடுத்து நீலாம்பரியாகவே வாழ்ந்தார்.

ramya krishnan
ramya krishnan

கே.ஆர்.விஜயாவிற்கு பிறகு அம்மன் வேடம் என்றாலே ரம்யா கிருஷ்ணன் தான் என்கிற பாணியில் தமிழில் நடித்து வந்தாலும் தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை கவர்ச்சிக்கன்னி தான்.

ஒரு படத்தின் போட்டோ சூட்டுக்காக நீச்சல் உடையில் ரம்யா கொடுத்த போஸ் அப்போதய நாளிதழ்களில் டிரண்டிங். இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது நீலாம்பரியின் நீச்சல் உடை போட்டோ.

- Advertisement -