Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரம்யாகிருஷ்ணன் பதிலாக ராஜ மாதாவாக நடிக்கும் 27 வயது நடிகை.. அதிகாரபூர்வமாக வெளியான தகவல்
நான் ஈ மகதீரா படங்களை தொடர்ந்து இயக்குனர் ராஜமவுலியின் பிரம்மாண்டத்தின் உச்சமாக வெளியான படம் பாகுபலி. இருபாகங்களாக எடுக்கப்பட்ட இந்த படம் ஒரு வரலாற்று கதையம்சம் கொண்டிருந்தது.
இதில் பிரபாஸ் ராணா தமன்னா அனுஷ்கா ரம்யா கிருஷ்ணன் சத்யராஜ் நாசர் என ஒவ்வொரு கதாப்பத்திரங்களும கதையம்சத்தோடு ஒத்திருக்கும். இப்படி ஒரு பிரம்மாண்டமான கூட்டணியோடு பிரமாதமாய் படமாக்கியிருப்பார் இயக்குனர் ராஜமவுலி.
திரைக்கதையில் பத்து நிமிடத்திற்கு ஒருமுறையேணும் பார்வையாளர்களை வியப்பில் வீழ்த்திஇருப்பார் இயக்குனர். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என அந்த வருடத்தின் மாஸ் ஹிட் கொடுத்தது இரு பாகங்களும்.

baahubali wamiqa gabbi
இப்படி எடுக்கப்பட்ட பாகுபலி இப்போது வெப் சீரியஸாக எடுக்கப்பட உள்ளது. ராஜமாதா சிவகாமி தேவியின் இளமைக்கால வாழ்வை கதையம்சமாக கொண்டு தயாராகிறது இந்த சீரியஸ்.
இதில் இளம் வயது சிவகாமியாக நடிக்க நடிகை சமந்தாவை படக்குழு அனுகியுள்ளது அவர் மறுத்துவிடவே இப்போது வாமிகா கபி என்கிற நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
வாமிகா கபி ஏற்கனவே “மாலை நேரத்து மயக்கம்” என்ற பெயரில் 2016ல் வெளியான படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வெப் சீரயஸூக்கான பட்ஜெட் 200கோடிகளை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
