425 நாட்கள் ஓடி சாதனை படைத்த ராமராஜன் படம்.. 33 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் பார்ட் 2

80 காலகட்டத்தில் ரஜினி, கமலுக்கு இணையான புகழ் மற்றும் அந்தஸ்தோடு இருந்தவர் தான் ராமராஜன். அதிலும் கிராமத்து கதாபாத்திரங்கள் இவருக்கு பக்காவாக பொருந்தும். அப்படி இவர் நடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஒன்று தற்போது 33 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகமாக உருவாக இருக்கிறது.

அதாவது கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் போன்ற பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்த திரைப்படம் தான் கரகாட்டக்காரன். கிட்டத்தட்ட 425 நாட்கள் தியேட்டரில் ஓடி சாதனை படைத்த இந்த திரைப்படம் இப்போதும் கூட ரசிகர்களின் ஃபேவரைட் படமாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Also read: முதல் முறையாக சின்ன திரையில் என்ட்ரி கொடுக்கும் ராமராஜன்.. வெள்ளி விழா நாயகனுக்கு இப்படி ஒரு நிலைமை

அந்த வகையில் தற்போது கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு கரகாட்டக்காரன் 2 வை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார். ஏற்கனவே இது குறித்து ஒரு பேச்சு திரையுலகில் அடிபட்டுக் கொண்டு தான் இருந்தது. அதில் ராமராஜன் அப்பா கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று கூட பேசப்பட்டது.

ஆனால் இப்போதும் கூட நான் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அவர் அடம் பிடித்த காரணத்தினால் இந்த பேச்சுவார்த்தை முற்றுப்பெறாமல் இருந்தது. ஆனால் தற்போது கரகாட்டக்காரன் 2 உருவாவது உறுதி என வெங்கட் பிரபு ஒரு மேடையில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதன்படி தன் அப்பாவிடம் இதற்கான அனுமதியை வாங்கி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Also read: ராமராஜன் மறுத்த 5 இரண்டாம் பாக படங்கள்.. விஜய் மில்டனை விரட்டியடித்த வில்லுபாட்டுகாரன்

அது மட்டுமல்லாமல் ராமராஜனை தவிர வேறு யாராலும் அந்த கதாபாத்திரத்தை செய்ய முடியாது என்றும் தற்போது சிவா அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் கூறி அனைவரின் ஆவலையும் அதிகரிக்க வைத்துள்ளார். அவர் மட்டும் இதில் நடிக்கவில்லை என்றால் படம் கண்டிப்பாக எதிர்பார்த்த அளவுக்கு வராது. அதனால் சிவா நிச்சயம் இப்படத்தில் நடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுவே இன்ப அதிர்ச்சியாக இருக்கும் நிலையில் படத்தில் கவுண்டமணி, செந்தில், ராமராஜன் ஆகியோரும் கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார்களாம். இது குறித்த பேச்சு வார்த்தைகள் அனைத்தும் முடிந்தவுடன் விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவர இருக்கிறது. அந்த வகையில் இந்த இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

Also read: பல்லுப்போன வயதில் டூயட் பண்ணும் ராமராஜன்.. வளர்ச்சியைக் கெடுத்துக் கொண்ட 28 வயது இளம் நடிகை

- Advertisement -