பல்லுப்போன வயதில் டூயட் பண்ணும் ராமராஜன்.. வளர்ச்சியைக் கெடுத்துக் கொண்ட 28 வயது இளம் நடிகை

தமிழில் 80,90 காலகட்டத்தில் பல திரைப்படங்களில் நடிகர் ராமராஜன் நடித்த அசத்தி உள்ளார். இவரது நடிப்பில் வெளியான கரகாட்டகாரன், எங்க ஊரு பாட்டுக்காரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தவை. இதனிடையே ராமராஜன் அரசியலுக்கு என்ட்ரியாகி சினிமாவில் மார்க்கெட்டை இழந்தார்.

பின்னர்,2001-ஆம் ஆண்டு வெளியான சீறிவரும் காளை திரைப்படத்தை இயக்கி நடித்த ராமராஜன், அதன்பின் 2012ஆம் ஆண்டு மேதை திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது ராமராஜன் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் விதமாக சாமானியன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Also read : நடிப்பே வேண்டாம் என ஒதுங்கிய மார்க்கண்டேயன்.. ராமராஜன், மோகன் போல் இல்லாமல் ஒதுங்கும் சீனியர்

இயக்குனர் ராஹேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் ராமராஜன், எம்.எஸ் பாஸ்கர், ராதாரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், வங்கியில் நடக்கும் மோசடிகள் மற்றும் அதனால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்ற கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் 62 வயதில் தனது ரீ-என்ட்ரியை கொடுத்துள்ள ராமராஜனுக்கு ஹீரோயினாக நடிக்க நடிகை ஸ்மிருதி வெங்கட் தேர்வாகியுள்ளார். இவர் தமிழில் வெளியான இன்று நேற்று நாளை திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி அதன் பின் தடம், மூக்குத்தி அம்மன், மாறன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து அசத்தியவர்.

Also read : ஜோசியம் பார்த்து கணித்த ராமராஜன்.. அன்றே தெரிந்து கொண்ட நளினி

தற்போது ஸ்மிருதி வெங்கட் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நிலையில், ராமராஜனுக்கு ஜோடியாக சாமானியன் திரைப்படத்தில் நடிக்க தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ராமராஜனுக்கு இந்த வயதில் ஹீரோயினுடன் டூயட் கேட்கிறதா என சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும், ஸ்மிருதி வெங்கட் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கப்போகிறாரா அல்லது துணை நடிகையாக நடிக்கப் போகிறாரா என்பது தெரியவில்லை. இருந்தாலும் ராமராஜனின் திரைப்படத்தில் ஸ்மிருதி வெங்கட் கமிட்டாகி உள்ளது, அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Also read : ராமராஜன் விவாகரத்துக்கு இந்த நடிகைதான் காரணமா.? பல வருடம் கழித்து வெளியான உண்மை

- Advertisement -