விஜய், அஜித் மாதிரி என்னால முடியல.. ஆர்ஆர்ஆர் மேடையில் ஓப்பனாக பேசிய ராம் சரண்

பாகுபலி இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ஆர்ஆர்ஆர். பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்துள்ளார்கள்.

ஆர்ஆர்ஆர் படத்திற்கு பாகுபலி படத்தில் இசையமைத்த கீரவாணி இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அண்மையில் வெளியாகி பிரம்மிப்பை ஏற்படுத்தியது.

ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் நடைபெற்ற நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இப்படம் ஜனவரி 7ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட ராம் சரண் பேசிய பொழுது படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். அத்துடன் ஆர்ஆர்ஆர் படத்தின் தமிழ் டப்பிங்கை ராம் சரனே பேசி உள்ளாராம். ராம் சரணுக்கு தமிழ் பேச தெரியும், ஆனால் தமிழில் சரளமாக பேச வராது.

இதனால் ஆர்ஆர்ஆர் படத்தின் தமிழ் டப்பிங்கை வேறு யாராவது வச்சு பண்ணலாம் என யோசித்தாராம். ஆனால் இயக்குனர் ராஜமவுலி ராம்சரண் தான் பேச வேண்டும், அப்போது தான் சரியாக இருக்கும் என கூறினாராம். படத்தின் தமிழ் பதிப்புக்கான வசனங்களை மதன் கார்க்கி எழுதியிருந்தார்.

ராம் சரண் டப்பிங் செய்யும் போது மதன் கார்க்கி ஓகே சொன்னால்தான் அடுத்த சீனுக்கு ராம் சரண் செல்வாராம். அத்துடன் தமிழ் சூப்பர் ஸ்டார்கள் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போல என்னால் தமிழ் பேச முடியாது. ஆனால் என்னால் எந்த அளவு முடியுமோ அதைவிட ஒரு படி மேலாக உழைத்து உள்ளேன். இப்படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என ராம் சரண் கூறியுள்ளார்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை