சீரியலுக்கு போய் சீரழிந்த ரக்சனின் எக்ஸ் காதலி.. நடிக்க தெரிஞ்சும் கழட்டிவிட்ட பிரபல சேனல்

விஜய் டிவியில் சில வருடங்களாக தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் ரக்சன். ஒரு நிகழ்ச்சியை மிகவும் கலகலப்பாக எடுத்துச் செல்லும் இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகிறார். இளம் பெண்களிடம் இவர் செய்யும் சேட்டை ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

சின்னதிரையில் கிடைத்த பிரபலத்தின் மூலம் வெள்ளித்திரையிலம் ரக்சன் கால் பதித்தார். அந்த வகையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துல்கர் சல்மானின் நண்பராக ரக்சன் நடித்திருந்தார். இந்நிலையில் விஜய் டிவி பிரபலம் ஒருவருடன் ரக்சன் கிசுகிசுக்கப்பட்டார்.

Also Read : காந்தாரா படத்தை வைத்து ஓட்டியதால் விலகும் சீரியல் பிரபலம்.. விஜய் டிவி டிஆர்பி-க்கு வைத்த பெரிய ஆப்பு

அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பான்மையான நிகழ்ச்சியில் ரக்சன் உடன் இணைந்து தொகுத்து வழங்குபவர் ஜாக்லின். இவருடைய கரகரப்பான பேச்சால் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றார். எங்கு பார்த்தாலும் ஜாக்குலின் ரக்சன் உடன் செல்வதால் இணையத்தில் இவர்கள் இருவரை பற்றி கிசுகிசுக்கள் வெளியானது.

ரக்சனைப் போல ஜாக்லினுக்கும் வெள்ளிதிரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் தங்கையாக கோலமாவு கோகிலா படத்தில் நடித்து அசத்தி இருப்பார். இப்போது தான் பட வாய்ப்பு கிடைத்து வந்த நிலையில் விஜய் டிவியில் தேன்மொழி பி ஏ என்ற தொடரில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Also Read : ஓவர் குடி, குக் வித் கோமாளி அரங்கில் மட்டையான போட்டியாளர்.. உடனே தூக்கிட்டு விஜய் டிவி பிரபலத்திற்கு வாய்ப்பு

விஜய் டிவி கூப்பிட்டதால் வெள்ளித்திரை வாய்ப்பை உதறி தள்ளிவிட்டு ஜாக்குலின் இந்த தொடரில் கதாநாயகியாக நடித்து வந்தார். ஆனால் ரசிகர்கள் மத்தியில் இந்த தொடருக்கு வரவேற்பு கிடைக்காதலால் பாதியிலேயே ஊத்தி மூடப்பட்டது. மேலும் இந்த சீரியலுக்காக ஜாக்லின் சற்று உடம்பும் போட்டார்.

கடைசியில் தேன்மொழி பி ஏ சீரியலுக்குப் பிறகு அவருக்கு வாய்ப்பே வராமல் போய்விட்டது. இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் எங்கு இருக்கிறார் என்ற எந்த விவரமும் தெரியாது அளவுக்கு முடங்கி கிடக்கிறார். சீரியலால் ஜாக்லினின் திரை வாழ்க்கை சீரழிந்து விட்டது.

Also Read : டிஆர்பி-யில் முதல் மூன்று இடத்தை பிடித்த சேனல்கள்.. விஜய் டிவி-கே தண்ணி காட்டிய பிரபல டிவி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்