பிக்பாஸில் அதிக ரசிகர் பட்டாளம் உள்ள ராஜீவின் மனைவி.. இணையத்தில் வைரலாகும் கல்யாண புகைப்படம்

பிக் பாஸ் 5 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ராஜூ ஜெயமோகன். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் கனா காணும் காலங்கள், கல்லூரி சாலை, ஆண்டாள் அழகர்சரவணன் மீனாட்சி மற்றும் பாரதிகண்ணம்மா ஆகிய சீரியல்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இருப்பினும் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் எல்லாம் இருந்தாலும் பிக்பாஸில் தற்போது இவருடைய பேச்சுக்கும் செயலுக்கும் ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் உள்ளனர்.

அவ்வப்போது பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சண்டை சச்சரவுகளுக்கு குரல் கொடுப்பதும் தேவையில்லாமல் வரும் வாக்குவாதங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதும் சாதுரியமாக செயல்பட்டு வருகிறார். அதனால் மற்ற போட்டியாளர்கள் ராஜீவ் மீதுகோபத்தில் உள்ளனர். அதே போல் அவ்வப்போது மற்ற போட்டியாளர்கள் அறிவுரை கூறுவதும் என அக்கறை காட்டி வருகிறார்.

raju jeyamohan
raju jeyamohan

இவர் நீண்ட வருடமாக காதலித்து தனது காதலியான தர்காவை எளிய முறையில் இரு வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்