இங்க தான் படம் ஃபிளாப்.. ஜப்பான்ல ஹவுஸ்புல், வசூலில் கெத்து காட்டும் ரஜினி.!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்துக்கு இங்கு மட்டுமல்ல ஜப்பானிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் ரஜினி படம் வெளியாகும் போது ஜப்பானில் இருந்து சென்னை வந்து படம் பார்க்கும் அளவிற்கு வெறித்தனமான ஜப்பான் ரசிகர்களும் உள்ளனர்.

ரஜினி நடித்த முத்து, படையப்பா, சிவாஜி உள்ளிட்ட படங்கள் ஜப்பானில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில்தான் சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிப்பில் வெளியான தர்பார் படம் ஜப்பானில் வெளியாகியுள்ளது.

ரஜினியை பொறுத்தவரை தர்பார் படம் ஒரு தோல்விப்படமாகும். அப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. ஆனால் இப்படம் ஜப்பான் மொழியில் வெளியாகி அங்கு சக்கை போடு போட்டு வருகிறது.

அப்படம் வெளியான அனைத்து தியேட்டர்களும் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தீபாவளிக்கு அண்ணாத்த படம் வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

rajini-movie-japan
rajini-movie-japan
- Advertisement -