அம்மாடியோ எம்புட்டு கலெக்ஷன்.. தலைசுற்றி போன ராஜ்கமல், லதா ராவ் வீடியோ!

சரவணா ஸ்டோர்ஸ் எலைட் கோல்ட் ஷோரூமில் தங்க நகைகளை கண்டு திகைத்துப் போய் உள்ளனர் ராஜ்கமல், லதா ராவ். தமிழகத்தில் தங்கம் வெள்ளி வைரம் என ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான மிகப்பெரிய ஷோரூம்களை கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் தான் சரவணா ஸ்டோர்ஸ் எலைட். சென்னையில் டி நகர் மற்றும் தாம்பரம் என 2 இடங்களில் பிரம்மாண்டமாக செயல்பட்டு வருகிறது.

பல திரையுலகப் பிரபலங்கள் ஷாப்பிங் செய்துள்ள இந்த ஷோரூமில் தற்போது சின்னத்திரை பிரபலங்களான ராஜ்கமல் மற்றும் லதா ராவ் ஆகியோர் ஷாப்பிங் செய்துள்ளனர். தி நகரில் உள்ள ஷோ ரூமுக்குள் சென்றதும் அங்கிருந்த தங்க நகை கலெக்சனை பார்த்து இருவரும் திகைத்துப் போய் உள்ளனர். ‌

ஆரம்பத்திலேயே லதா ராவ் தனக்கு கல் வைத்த நகைகள் தான் வேணும் என கேட்க 3வது தளம் முழுவதும் கல் வைத்த தங்க நகைகள் தான் உள்ளதாக ஊழியர்கள் கூறுகின்றனர். கல்வைத்த தங்க நகைகளில் ஆண்ட்டிக் நகைகள், விதவிதமான டிசைன்களில் தங்க நகைகளை அணிந்து அழகு பார்த்துள்ளனர்.

மேலும் மோதிரத்துடன் கூடிய மெஹந்தி வளையல்கள், கை முழுவதற்கும் அழகு சேர்க்கும் வகையில் மிகப்பெரிய வளையல்கள் என எக்கச்சக்கமான கலெக்ஷன்கள் சரவணா ஸ்டோர்ஸ் எலைட்டில் கிடைப்பதை கண்டு வியந்துள்ளனர்.

பொதுவாக நடுத்தர மக்கள் ஒரே நேரத்தில் அதிகமான பணம் கொடுத்து நகை வாங்குவது என்பது முடியாத விஷயம். இப்படியான மக்களுக்கு உதவும் வகையில் சரவணா ஸ்டோர்ஸ் எலைட் ஷோரூம் இன் ஒரு திட்டமும் கொண்டுவரப்பட்டிருப்பதாக ராஜ்கமல் லதா ராவ் தெரிவித்துள்ளனர்.

அதாவது அட்வான்ஸ் கோல்ட் புக்கிங் என்ற பெயரில் ஆறு மாத காலத்திற்கு தங்கள் கையில் கிடைக்கும் பணத்தை சரவணா ஸ்டோர்ஸ் எலைட் ஷோரூமில் கட்டி பெரிய தொகையாக சேர்ந்த பிறகு அதற்கு இணையான நகையை பெற்றுக் கொள்ளலாம் என்பது தான். இல்லத்தரசிகளுக்கு இது எவ்வளவு சிறப்பான திட்டம் என்பது தெரியும் என லதா ராவ் தெரிவித்தார்.

அதன் பின்னர் கழுத்தை ஒட்டி வரும் ஷாக்கட் நகைகளை அணிந்து அழகு பார்த்து விட்டு அப்படியே சரவணா ஸ்டோர்ஸ் எலைட் டைமண்ட் ஷோரூமுக்கு ஒரு விசிட் அடித்து அட்வான்ஸ் தங்க நகை புக்கிங் திட்டத்தில் பணத்தை சேர்த்து விட்டு இன்னொரு நாள் வந்து வைர நகைகளை வாங்கலாம் என வீட்டிற்கு கிளம்பியுள்ளனர்.