கர்ணன் பட நடிகையை தட்டி தூக்கிய மூத்த நடிகர்.. ஹைதராபாத்தில் படப்பிடிப்பு!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரஜிஷா விஜயன். கர்ணன் படத்தில் மலையாள புதுவரவான ரஜிஷா விஜயனின் நடிப்பை பலரும் பாராட்டினார்கள்.

அறிமுகமான முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமானார். அந்த வகையில் தற்போது கர்ணன் படத்தைத் தொடர்ந்து கார்த்தியுடன் சர்தார் மற்றும் சூர்யா – ஞானவேல் இணைந்துள்ள புதிய படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கிலும் நாயகியாக அறிமுகமாகவுள்ளார் ரஜிஷா விஜயன். சரத் மாந்தவா இயக்கத்தில் ரவிதேஜா நடித்து வரும் ராமாராவ் ஆன் டுயூட்டி படத்தின் நாயகியாக ரஜிஷா விஜயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் மற்றொரு நாயகியாக திவ்யான்ஷாவும் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

rajisha
rajisha
- Advertisement -