Vijay in Leo: தற்போது எங்கு திரும்பினாலும் லியோ படத்தின் தாக்கம் தான் ரசிகர்களிடம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் ஓவர் எதிர்பார்ப்பை வைத்து படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் அனைவரும் வழி மீது விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஐந்து நாட்களில் அனைத்து திரையரங்குகளும் ஆரவாரத்துடன் சரவெடியாக வெடிக்கப் போகிறது. எப்படியும் இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆகிவிடும் என்று விஜய்யின் ரசிகர்கள் உச்சகட்ட நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
இதற்கிடையில் படம் ஆரம்பித்ததில் இருந்து இப்போது வரை ஏதாவது பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அதிலும் டிரைலரை பார்த்த பலரும் இந்த படம் வன்மத்தை அதிகமாகவும், கெட்ட வார்த்தைகளை காட்டி தாறுமாறாகவும் இருக்கிறது. இப்படிப்பட்ட படத்தை நாங்கள் எப்படி குடும்பத்துடன் வந்து பார்க்க முடியும்.
அத்துடன் விஜய் படம் என்றால் குழந்தைகள் அதிகமாக பார்க்க ஆசைப்படுவார்கள் என்ற விஷயம் தெரிந்தும் விஜய் இதில் எப்படி நடிக்கலாம் என்று பல கேள்விகளை முன்வைத்து அவர் மீது புகார் கொடுக்கும் அளவிற்கு சர்ச்சையாக வெடித்தது. இந்த சூழலில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படங்களில் பீப் சவுண்ட் போட்டு கெட்ட வார்த்தைகளை மறைத்து விடுவோம் என்று படக்குழு தெரிவித்து இருந்தார்கள்.
இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தாலும் அதையெல்லாம் தகர்த்திருந்து ரிலீசுக்கு தற்போது தயாராகி டிக்கெட் புக்கிங் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் எப்படியும் ஆயிரம் கோடி வசூலை பெற்று விடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் பொழுது லியோ படத்திற்கு போட்டியாக ரஜினி அவருடைய வெற்றி படத்தையும் திரையரங்கில் ரீ ரிலீஸ் செய்ய களமிறங்குகிறது.
அதாவது ரஜினி நடித்த எத்தனையோ படங்களில் சில படங்கள் என்றைக்கும் மறக்க முடியாத ப்ளாக் பஸ்டர் படமாக இருக்கின்றன. அதில் ஒன்றை தான் ஆயுதமாக வர இருக்கிறது. அந்த வகையில் லியோவுக்கு போட்டியாக பாட்ஷா படம் ரீ ரிலீஸ் செய்யப் போகிறார்கள். இதற்காக டிக்கெட் புக்கிங் இன்று முதல் ஓபன் ஆகி விட்டது.
என்னதான் பாட்ஷா படம் சூப்பர் ஹிட் ஆகியிருந்தாலும், இப்போ ட்ரெண்டிங்கில் இருக்கும் லியோ படத்திற்கு போட்டியாக வர முடியாது. அதனாலேயே பல தியேட்டர்கள் ரீ ரிலீஸ் செய்ய மறுத்துவிட்டார்கள். ஆனால் திருப்பூர் சக்தி சினிமாஸ் மட்டும் ரீ ரிலீஸ் பண்ணப் போகிறார்கள். இதெல்லாம் லியோ படத்தின் வசூலை குறைப்பதற்காகவும், ரஜினியின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி அவர்களை டைவர்ட் பண்ணுவதற்காக இந்த மாதிரி தேவையில்லாத விஷயத்தை செய்கிறார் என்று விஜய் ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.