கொட்டிய பணமழை, என் பங்குக்கு நானும் காலி பண்ணுவேன்.. புது அவதாரம் எடுத்த ரஜினியின் அடுத்த வாரிசு

Actor Rajini: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் கோலோச்சி இருந்தாலும், அவருடைய மகள்கள் சினிமாவை தேர்ந்தெடுத்தாலும் ஹீரோயின் ஆக ஆசைப்படவில்லை. அதற்கு மாறாக இருவருமே சினிமாவில் இயக்குனர் ஆனார்கள். அதன்படி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக லால் சலாம் படத்தை எடுத்து வருகிறார்.

விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ரஜினி கேமியோ தோற்றத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பின்னணி வேலைகள் நடந்து வருகிறது. இந்த சூழலில் சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் படம் நல்ல வசூலை பெற்றது. இதனால் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் காசோலை மற்றும் கார் ஆகியவற்றை பரிசாக வழங்கி இருந்தார்.

Also Read : சொப்பனத்துல கூட யோசிக்கல சாரே, முதல் முறையாக முகத்தை காட்டிய வர்மன்.. ரஜினியால் வெளியில தல காட்ட முடியல

இந்த சூழலில் ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே கோவா படத்தை தயாரித்திருந்தார். இப்போது மீண்டும் தயாரிப்பாளராக கேங்ஸ் என்ற படத்தை தயாரிக்க இருக்கிறார். ஏற்கனவே ரஜினியை தனது மகள்களுக்காக தான் சம்பாதித்த பணத்தை கொடுத்திருக்கிறார்.

இப்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் திடீரென தயாரிப்பாளராக மீண்டும் அவதாரம் எடுத்துள்ளதால் அப்பா பெயரை இந்த முறையாவது காப்பாற்றுவாரா என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கான பூஜை இன்று போட்ட நிலையில் கதாநாயகனாக அசோக் செல்வன் நடிக்க இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

Also Read : மாமனார், மருமகன் இடையே நடக்கும் போட்டி.. ஒரே நடிகரை டார்கெட் செய்யும் ரஜினி, தனுஷ்

சமீபகாலமாக நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை தான் அசோக் செல்வன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக இவரது நடிப்பில் வெளியான போர் தொழில் படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. ஆகையால் சௌந்தர்யா தயாரிப்பில் உருவாகும் இந்த படமும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்

soundarya
soundarya

மேலும் ரஜினியின் வாரிசுகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒருபுறம் இயக்குனராக பிசியாக உள்ள நிலையில், மற்றொருபுறம் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் இறங்கி இருப்பது ரஜினி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் கேங்ஸ் படத்தை நோவா ஆபிரஹாம் இயக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

அசோக் செல்வனுடன் சௌந்தர்யா

soundarya-rajinikanth
soundarya-rajinikanth

Also Read : ரஜினி மனதில் இருந்த தமன்னாவை தூக்கி எறிய செய்த கலாநிதி.. ஷூட்டிங்கில் ஒயிட் பியூட்டி செய்த மட்டமான வேலை

- Advertisement -