சூப்பர் ஸ்டாரின் மாஸ்டர் பிளான்.. அணைகட்டி தடுக்க அண்ணாத்த கால்வாய் இல்லடா, காட்டாறு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற பெயரைக் கேட்டாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது அரசியலுக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு கடைசி நேரத்தில் ரசிகர்களை கழுத்தருத்தது தான். பெரிதும் எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இருந்தாலும் சூப்பர் ஸ்டாரின் உடல்நிலை கருதி அவருடைய முடிவை மனதார ஏற்றுக் கொண்டனர். மேற்கொண்டு சினிமாவில் ரஜினிகாந்த் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வியும் நடிகர்கள் மத்தியில் எழுந்தது.

அந்த கேள்விக்கு பதிலாக சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வருகின்ற தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் கோலாகலமாக வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். அதனை தொடர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்போது விடுபட்ட அண்ணாத்தே படத்தின் படப்பிடிப்பு தொடரும் என்பது தான்.

அதற்கான நேரமும் வந்து விட்டதாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருகின்ற மார்ச் மாதம் முதல் வாரத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளாராம். மேலும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகளை மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளாராம்.

annaththe-cinemapettai-01
annaatthe-cinemapettai-01

அதனைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக சீயான் விக்ரம் நடிக்கும் சீயான் 60 படத்தை இயக்கப் போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சினிமாவில் மீண்டும் மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டுள்ளாராம். அதாவது வருகின்ற தீபாவளிக்கு அண்ணாத்த படமும், அடுத்த பொங்கலுக்கு இன்னொரு படமும் கொடுத்துவிட வேண்டும் என உறுதியாக இருக்கிறாராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்