வெளிநாட்டில் செட்டில், ரஜினி கூப்பிட்டும் மறுத்த நண்பன்.. விஜய் சேதுபதிக்காக நடித்துக் கொடுத்த ஒரே படம்

Rajini Friend Act In Vijay Sethupathi Film: சினிமாவில் உள்ள பெரிய ஹீரோக்களுக்கு தங்களின் படங்களில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் தான் நண்பர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில் ரஜினியுடன் நிறைய படங்களில் நடித்த நடிகர்களை தற்போதும் சூப்பர் ஸ்டார் தொடர்பில் வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் மறைந்த சரத்பாபு ரஜினியின் நண்பர் தான்.

மேலும் பல படங்களில் சரத் பாபு ரஜினிக்கு நண்பராகவே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ரஜினியின் மற்றொரு நண்பர் சினிமாவில் இருந்து ஒதுங்கி உள்ளார். இந்நிலையில் சூப்பர் ஸ்டாரே மீண்டும் படங்களில் நடிக்க கூப்பிடும் அந்த நடிகர் மறுத்துவிட்டார். ஆனால் விஜய் சேதுபதிக்காக ஒரு படத்தில் நடித்துக் கொடுத்தார்.

Also Read : விஜய் சேதுபதி மார்க்கெட்டை பிடிப்பதற்கு எடுத்த அஸ்திவாரம்.. இந்த விஷயத்தில் கோட்டை விட்ட 80ஸ் ஹீரோ

அதாவது ரஜினியின் அண்ணாமலை, பாட்ஷா போன்ற படங்களில் நடித்தவர் ஜனகராஜ். இவர் கமலின் நிறைய படங்களிலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி இவருடைய வித்யாசமான சிரிப்புக்கே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக இப்போது சினிமாவை விட்டு ஜனகராஜ் ஒதுங்கி இருக்கிறார்.

அதுமட்டுமின்றி ஜனகராஜின் மகனும் அமெரிக்காவில் நல்ல வேலையில் இருப்பதால் தந்தையை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரை மீண்டும் எப்படியாவது சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என ரஜினி முயற்சி செய்தார். ஆனால் அப்போது மறுத்த நிலையில் விஜய் சேதுபதி நேரடியாகவே ஜனகராஜ் இடம் தனது படத்தில் நடிக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

Also Read : பேச்சுக்கு சொல்லாமல் செய்து காட்டிய விஜய் சேதுபதி.. மெய்சிலிர்க்க வைத்த உதவி

ஆரம்பத்தில் மறுத்த ஜனகராஜ் வேறு வழியில்லாமல் 96 படத்தில் நடிக்க சம்மதித்தார். அதுவும் இரண்டு முதல் நான்கு நாட்கள் மட்டுமே அவரது கால்ஷீட் இருந்ததாம். அந்தப் படத்துடன் தனது சினிமா கேரியரை முடித்துக் கொண்டு தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அதுமட்டுமின்றி ஜனகராஜின் முக வாதத்திற்காக கரண்ட் ஷாக் வைத்துள்ளனர்.

இதன் காரணமாக அவருக்கு நரம்பு பிரச்சனை, சுயநினைவிழப்பு போன்ற பிரச்சனைகள் இருக்கிறதாம். இதனால் ஜனகராஜின் மகன் அமெரிக்காவில் அவரை நன்கு பார்த்துக் கொண்டு சிகிச்சை அளித்து வருகிறார். ஆனால் அவரது ரசிகர்கள் மீண்டும் ஜனகராஜ் திரையில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

Also Read : 3வது இடத்திற்கு போட்டி போட்ட கார்த்திக்.. கமல், ரஜினியை முந்த செய்த வேலை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்