திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

ரஜினியின் சினிமா கேரியருக்கு எண்டு கார்ட் போடும் லோகேஷ்.. வேற லெவலில் உருவாகும் சூப்பர் ஸ்டாரின் கடைசி படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 70 வயதை கடந்தும் தற்போது வரை படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அண்ணாத்த படத்தை தொடர்ந்து இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்மரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் சமீபகாலமாக ரஜினியின் படங்கள் தொடர் தோல்வியை தழுவி வருவதால் லோகேஷ் இடம் கதை கேட்டுள்ளாராம். ஏனென்றால் விஜய், கமல் போன்ற நடிகர்களை உச்சத்திற்கு அழைத்துச் சென்றதில் லோகேஷ்க்கு முக்கிய பங்கு உண்டு.

Also Read : வயிறு குலுங்க சிரிக்க வைத்த ரஜினியின் 5 காமெடி படங்கள்.. மீசையை வைத்து தேங்காய்-வை படுத்திய பாடு

ஏனென்றால் இவர்கள் பல தோல்வி படங்கள் கொடுத்து வந்த நிலையில் கடைசியாக லோகேஷ் இடம் ஒரு படத்தை கொடுத்து இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்துள்ளனர். இப்போது அவர்களது மார்க்கெட்டே வேற லெவலில் உள்ளது. ஆகையால் ரஜினி தாமாக முன்வந்து இறங்கி லோகேஷிடம் சம்மதம் வாங்கி இருக்கிறார்.

ஆனால் ரஜினிக்கு இப்போது வயதாகி விட்டதால் இவரை வைத்து படத்தை எப்படி கொண்டு செல்வது என லோகேஷ் யோசித்து ஒரு கணக்கு போட்டு உள்ளார். லோகேஷ் படங்களில் நிறைய ஹீரோக்களை ஒன்றிணைத்து படத்தை வேற மாதிரி ரசிகர்களுக்கு ட்ரீட்டாக கொடுப்பார்.

Also Read : ரஜினி எல்லாம் ஒரு சிறந்த நடிகரா?. விருது கொடுக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் பேசிய அமீர்

ரஜினி படத்தில் இதேபோன்று ஹீரோக்களை இறங்கினால் அது அவ்வளவாக நன்றாக இருக்காது. ஆகையால் உச்ச நட்சத்திரங்களான அஜித் மற்றும் விஜய் இருவரையும் ரஜினியுடன் ஒன்றிணைத்து நடிக்க வைக்கலாம் என்று லோகேஷ் யோசனை கூறியுள்ளாராம். ஆனால் இதற்கு அஜித், விஜய் இருவரும் சம்மதிப்பார்களா என்ற குழப்பமும் உள்ளது.

ரஜினியின் கடைசி படமாக அமைந்தால் விஜய், அஜித் இருவரும் ஒத்துக்கொள்வார்கள் அதுமட்டுமின்றி படம் உலக அளவில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று லோகேஷ் கூறியுள்ளார். இதற்கு ரஜினியும் உங்கள் படத்தை எல்லாம் முடித்து வாருங்கள் கடைசியாக நாம் படம் பண்ணலாம் என்று லோகேஷிடம் சொல்லி உள்ளாராம். ஆகையால் சூப்பர் ஸ்டார் மற்றும் லோகேஷ் இணையும் படம் ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : மீண்டும் கூடும் ரஜினியின் மாநாடு.. அரசியல் மாநாடாக மாறிவிடும் என பயத்தில் சூப்பர் ஸ்டார்.!

- Advertisement -

Trending News