தொடர் பிளாப், தடம் தெரியாமல் நின்ற மாதவி.. வாழ்க்கையை மாற்றிய ரஜினியின் அட்வைஸ்

தென்னிந்திய சினிமாவில் சுமார் 17 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி கதாநாயகியாக இருந்து அனைவரையும் மிரள வைத்தவர் தான் நடிகை மாதவி(Madhavi). அன்றைய முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல் ஆகியோருடன் பலமுறை ஜோடி போட்டார்.

சினிமாவில் நடித்த 17 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒரியா என அனைத்து மொழிகளிலும் முன்னணி நாயகியாக கொடி நாட்டியவர். அதுமட்டுமில்லாமல் கிட்டதட்ட 300 படங்களுக்கு மேல் நடித்து தள்ளியுள்ளார்.

நடிகை மாதவிக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே ஏகப்பட்ட கிசுகிசுக்கள் அப்போதே தோன்றின. ஏன் ஒரு கட்டத்தில் கமலஹாசன் மாதவியை தான் திருமணம் செய்ய இருப்பதாகவும் பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.

rajini-madhavi-cinemapettai
rajini-madhavi-cinemapettai

இதனால் மனச்சோர்வு அடைந்த மாதவி அதற்கு அடுத்து நடித்த படங்கள் அனைத்துமே தொடர் தோல்வியை சந்தித்து மார்க்கெட்டும் சுத்தமாக இல்லாமல் போய் விட்டதாம். இந்த நேரத்தில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார் மாதவி. அப்போது ரஜினிகாந்த் இமயமலையிலுள்ள தன்னுடைய குருநாதர் ஒருவரை போய் சந்திக்கும்படி ஆலோசனை கூறினாராம்.

பின்னர் மாதவியும் ரஜினியின் பேச்சை கேட்டு இமயமலைக்கு சென்றுள்ளார். அந்த குரு மாதவியிடம், உடனடியாக மாதவியை வெளிநாட்டில் தொழில் ஆரம்பித்து நஷ்டத்தை சந்தித்து இமய மலைக்கு வந்த வெளிநாட்டு நபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கை காட்டினாராம். மாதவியும் குருநாதர் பேச்சை நம்பி திருமணம் செய்து கொண்டாராம். ஆனால் இந்த திருமணத்திற்கு பிறகு உன்னால் கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் இந்தியா பக்கமே வர முடியாது எனவும் கூறி இருந்தாராம்.

முதலில் நம்பாத மாதவி திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலானார். திருமணத்திற்குப் பிறகு அந்த வெளிநாட்டு கணவரின் தொழிலும் நல்லபடியாக நடந்து தற்போது 3 மகள்களுக்கு தாயாக அங்கேயே செட்டிலாகிவிட்டார் மாதவி. இன்றும் தனக்கு சோர்வாக இருந்தால் ரஜினியிடம் தான் ஆலோசனை கேட்பாராம் மாதவி.

- Advertisement -