பல பேர் கெஞ்சியும் வழிவிடாத ரஜினிகாந்த்.. இன்று வரை ஏக்கத்தில் இருக்கும் திரையுலகம்

கோலிவுட்டில் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கும் கூட டஃப் கொடுக்கும் விதத்தில், தனது நடிப்பு திறமையின் மூலம் புகழின் உச்சியில் இருந்து வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்த அளவிற்கு சினிமா துறையில் இன்று வரையிலும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அதிலும் இன்றுவரையிலும் தொடர்ந்து  தனது படங்களில் ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார்.

மேலும் ரஜினி சினிமா வாழ்க்கையில் எந்த அளவிற்க்கு ஈடுபாடுடன் இருந்தாரோ அதே அளவிற்கு, தற்பொழுது ஆன்மீகத்திலும் நாட்டம் உள்ளவராய் திகழ்ந்து வருகிறார்.இதனை அடுத்து தனது திரை வாழ்க்கையில் பல வெற்றிப் பயணங்களை நிறைவு செய்துள்ளார். அதிலும் 45 ஆண்டுகளாக தனது திரை பயணத்தில் இருந்து வரும் இவர் ஒரு விஷயத்திற்காக மட்டும் பலபேர் கெஞ்சியும் வழிவிடாமல் இருந்து வருகிறார்.

Also Read: ரஜினி, கமலுக்கு இணையாக கொடிகட்டி பறந்த ஹீரோ.. பத்தே படங்களில் ஓரங்கட்டப்பட்ட நடிகர்

இன்றைய காலகட்டத்தில் சினிமா நட்சத்திரங்களுக்கு என்று பாராட்டு விழாக்கள் நடத்துவது என்பது மிகவும் பிரபலமான ஒன்றாகவே இருந்து வருகிறது. அதிலும் சமீபத்தில் கூட நடிகை மீனா அவர்களுக்கு சினிமா துறையில் 40 வருடங்களை வெற்றிகரமாக கடந்ததற்கு வெற்றி விழா நடத்தப்பட்டது. மேலும் கலா மாஸ்டர் ஏற்பாடு செய்ததில் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் இந்தப் பாராட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

சினிமா துறையில் உள்ள மற்ற பிரபலங்களின் பாராட்டு விழாக்களில் தவறாமல் கலந்து கொள்கிறார் ரஜினிகாந்த். இப்படி இருக்கும் பட்சத்தில் புகழின் வெளிச்சத்தில் உள்ள இவர் தனக்கென்று என பாராட்டு விழா வரும்பொழுது அதனை ஒதுக்கி வைத்துள்ளார். மேலும் கமலஹாசன் தனக்கு விருதுகள் வேண்டாம் என சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

Also Read: இருவரின் பிரிவை தாங்க முடியாத நடிகை.. யாரு கண்ணு பட்டுச்சோ மேடையிலேயே கண்கலங்கிய ரஜினி

தற்பொழுது அதனைப் போலவே ரஜினிகாந்த் அவர்களும் தனக்கு பாராட்டு விழா வேண்டாம், என்று இன்றுவரையிலும் விடாப்பிடியாக இருந்து இருக்கிறார். சினிமாவில் இருக்கும் பல திரை பிரபலங்கள் ரஜினிகாந்த்திற்கு பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். ஆனாலும் கூட அவர் அதற்கு இன்று வரையிலும் ஒப்புதல் தெரிவிக்காமல் இருந்து வருகிறார். 

அதிலும் உலகம் முழுவதிலும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். அந்த அளவிற்கு தனது நடிப்பின் மூலம் அனைவரையும் கட்டிப்போட்டு உள்ளார் என்றே சொல்லலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் ரஜினிகாந்த்திற்கு எப்படியாவது பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று திரையுலகத்தினர் ஏக்கத்தில் இருந்து வருகின்றனர்.

Also Read: ரஜினியிடம் இருந்து வந்த அழைப்பு.. 21 வருட தவத்திற்கு கிடைத்த பலன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்