சௌந்தர்யா கொடுத்த உச்சகட்ட அழுத்தம்.. யோசித்து வேறு மாதிரி முடிவுக்கு தயாரான ரஜினிகாந்த்

சமீபகாலமாக ரஜினி ஒரு மாஸ் கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவர் நடித்து வெளியான அண்ணாத்த திரைப்படம் அந்த அளவுக்கு மக்களிடம் சென்றடையவில்லை என்றே கூறலாம். அதனால் சமீபகாலமாக ரஜினி அப்செட்டில் இருந்து வந்துள்ளார்.

எப்படியாவது அடுத்து ஒரு தரமான படத்தை கொடுத்து விட வேண்டும் என்று உத்வேகத்தோடு ரஜினி, பல புதுமுக இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். இந்நிலையில் பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ரஜினிக்காக ஒரு கதை வைத்திருப்பதாகவும், எப்படியாவது அவரிடம் கதை சொல்ல வேண்டும் என்று ரஜினியின் உறவினரான அனிருத் இடம் தூது விட்டதாகவும் பேச்சுக்கள் அடிபடுகிறது.

அனிருத், சௌந்தர்யாவிடம் எப்படியாவது தனது நண்பனான நெல்சனுக்கு ஒரு பட வாய்ப்பு பெற்றுத் தரும்படி உச்சகட்ட அழுத்தம் கொடுத்திருக்கிறார். இவர்கள் கொடுத்த அழுத்தத்தினால் ரஜினியும், நெல்சன் இடம் கதை கேட்டு ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில்தான் நெல்சனின் பீஸ்ட் படம் ரிலீசாகி, எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த ரஜினி இப்படத்தைப் பற்றி எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.

இதனால் படம் ரஜினிக்கு பிடித்ததா அல்லது பிடிக்கலையா என்று தெரியவில்லை. ஆனால் படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருவதால் சன் பிக்சர்ஸ், ரஜினியிடம் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இந்த படத்தை பண்ணலாம் இல்லை என்றால் வேறு யாராவது ஒரு இயக்குனரை வைத்து பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியதாக தெரிகிறது.

இப்படி இருக்கையில் நெல்சன் படத்தில் ரஜினி நடிப்பாரா என்பது மிகப்பெரிய சந்தேகம் தான். ரஜினி தன்னுடைய சினிமா வாழ்க்கையை பொறுத்தவரை அவர் மட்டுமே தான் முடிவு எடுத்து வந்தார். ஆனால் முதல்முறையாக தனது குடும்பத்தின் பேச்சை கேட்டு சம்மதித்த படம் தலைவர் 169. இதனால் மிகுந்த யோசனையில் இருக்கும் ரஜினிகாந்த் வேறு ஒரு முடிவை எடுப்பாரா இல்லை நெல்சன்னை வைத்தே அடுத்த படமும் இயக்குவாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க முடியும். ரஜினியின் திரை வாழ்க்கையில் இதுவரை இயக்குனரை முடிவு செய்து ஆரம்பிக்கும் முன்பே மாற்றுவது இதுவே முதல் முறையாகும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்