அடுத்து உருவாகும் தலைவர் 170.. இயக்கப் போகும் பிரபல இயக்குனர்

சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு ரஜினிகாந்த் 169 படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குவதாக அறிவித்தனர்.

தலைவர் 169 படத்தை ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர். ஆனால் ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் இரண்டு வாரங்கள் அங்கு சிகிச்சை பெற்று விட்டு மீண்டும் தலைவர் 169 படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனவும் கூறி வந்தனர்.

இளம் இயக்குனர்களுக்கு வரிசையாக வாய்ப்பு கொடுக்கும் ரஜினி, நெல்சன் திலீப்குமாரை தொடர்ந்து தலைவர் 169 படத்திற்கு பிறகு ரஜினியை வைத்து கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்திடம் அருண்ராஜா காமராஜ் கதையை கூறியதாகவும், அந்த கதை ரஜினிக்குப் பிடித்துவிட்டதால் தலைவர் 169 படத்திற்குப் பிறகு தலைவர் 170 படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அருண்ராஜா காமராஜ் இப்படத்தில் ரஜினிகாந்திற்கு கதையில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனைக் கேட்ட ரஜினி ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர். இவரது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் கடந்த மே 20-ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்ட தாறுமாறாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அநீதிகளை சூறையாடுவது போல் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களின் அமோக வரவேற்ப்பைபெற்றிருக்கிறது. இந்தப் படத்திற்குப் பிறகு அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக  ரஜினிகாந்தின் 170-வது படத்தை இயக்கப் போகிறார் எனத் தெரிந்ததும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கும்மாளம் போடுகின்றனர்.