ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தும் மறுத்த ரஜினி.. மக்கள் நலனை மட்டுமே யோசித்த சூப்பர் ஸ்டார்

உலக அளவில் பிரபலமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பல நாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். அந்த வகையில் அவர் சொல்வதை வேதவாக்காக எடுத்துக் கொள்ளும் ரசிகர்களும் உண்டு. அந்த அளவுக்கு அவரின் மேல் ரசிகர்கள் மிகுந்த அன்பு காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தன் மீது அன்பு கொண்ட ரசிகர்களுக்காக ரஜினி ஒரு விஷயத்தை செய்திருக்கிறார். அதாவது தற்போது பல கார்ப்பரேட் நிறுவனங்களும் நடிகர்களை வைத்து தங்கள் வியாபாரத்தை பெருக்கிக் கொள்கின்றனர். அந்த வகையில் அழகு சாதனம், உணவுப் பொருட்கள் என்று அனைத்து ப்ராடக்டுகளிலும் திரை நட்சத்திரங்கள் தான் நடித்து வருகின்றனர்.

இது முற்றிலும் மக்களை முட்டாள் ஆக்கும் ஒரு வேலை தான். ஏனென்றால் உடல் நலத்தை சீரழிக்கும் உணவு பொருளாக இருந்தாலும் தனக்கு பிடித்த நடிகர் சொல்கிறார்களே என்று மக்கள் அதை விரும்பி வாங்க ஆரம்பிக்கின்றனர். இதன் மூலம் ஏகப்பட்ட உடல் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படுகிறது.

அது மட்டுமல்லாமல் தற்போது ஆன்லைன் விளையாட்டின் மூலம் மக்கள் பெருமளவில் பாதிப்படைகின்றனர். ஆனால் அதை ஊக்குவிக்கும் வகையில் அந்த விளம்பரத்தில் பிரபல நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இதன் மூலம் நடிகர்களுக்கு பணம் மட்டும் தான் குறிக்கோளாக இருக்கிறது. ரசிகர்களைப் பற்றிய கவலை அவர்களுக்கு சிறிதும் இல்லை.

ஆனால் இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டும் விதிவிலக்கானவர். எப்படி என்றால் அவர் இதுவரை எந்த விளம்பர படத்திலும் நடித்தது கிடையாது. அரசு சார்ந்த போலியோ சொட்டு மருந்து, கண் தானம் உள்ளிட்ட விழிப்புணர்வு விளம்பரங்களில் மட்டுமே அவர் நடித்திருக்கிறார். அதற்கு அவர் எந்தவிதமான சம்பளமும் வாங்கிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு பிரபல நிறுவனம் தங்கள் காரை விளம்பரப்படுத்த ரஜினிக்கு 200 கோடி வரை சம்பளம் கொடுக்க முன் வந்தது. ஆனால் அவர் அதை திட்டவட்டமாக மறுத்துவிட்டார். தன்னிடம் அன்பு செலுத்தும் ரசிகர்கள் தான் எனக்கு முக்கியம் என்று அவர் கூறினாராம்.

ஆனால் இப்போது இருக்கும் நடிகைகள் பணத்திற்காக மதுபானத்தை கூட விளம்பரம் செய்து வருகின்றனர். இப்படி உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று தெரிந்தும் கூட பணத்திற்காக மக்களை ஏமாற்றம் நடிகர்களுக்கு மத்தியில் சூப்பர் ஸ்டார் தன்னை நம்பும் மக்களின் நலனை மட்டுமே யோசிக்கிறார்.

- Advertisement -

Trending News