நோ ரெஸ்ட், அமெரிக்காவில் இருந்து வந்ததும் அடுத்த படம்.. இயக்குனரை குறித்த சூப்பர் ஸ்டார்

ரஜினிகாந்த் மற்றும் சன் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவான அண்ணாத்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ஏகப்பட்ட குளறுபடிகளுக்கு பிறகு நல்லபடியாக அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் முடிக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் விரைவில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்த நேரத்தில் திடீரென சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுவிட்டார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் இன்னும் ஓரிரு தினங்களில் அமெரிக்காவில் இருந்து திரும்ப வர உள்ளாராம் ரஜினி. அதனைத் தொடர்ந்து ஓய்வு எடுக்காமல் படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டுகிறாராம்.

ரஜினி சமீபத்தில் தன்னுடைய நண்பர் வட்டாரங்களில் இன்னும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு படங்களை விரைவில் நடித்து முடித்து விட வேண்டும் என கூறியதாக சில மாதங்களுக்கு முன்பு ஒரு செய்தி வெளியாகி வைரல் ஆனது.

அமெரிக்காவில் இருந்து ரஜினி திரும்ப வந்ததும் அடுத்த பட அறிவிப்பு வெளியாக உள்ளதாம். பெரும்பாலும் இந்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க அதிக வாய்ப்பு இருக்கிறதாம்.

ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இந்த போட்டியில் இருந்த நிலையில் ஜகமே தந்திரம் வெளியான பிறகு அந்த போட்டியிலிருந்து நீக்கப்பட்டார் கார்த்திக். தற்போது தேசிங்கு பெரியசாமி ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.

annatthe-deepavali-cinemapettai
annatthe-deepavali-cinemapettai
- Advertisement -