ரஜினிகாந்த் உயிரை பணயம் வைத்து நடித்த படம் எது தெரியுமா.? நம்ம தல இப்ப வர அப்படித்தான்!

தமிழ் சினிமாவில் பல படங்கள் மூலம் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் ரஜினிகாந்த். இவர் ஆரம்ப காலத்தில் பல படங்களில் டுப் போடாமலேயே நடித்துள்ளார். அவர் எந்த படத்தில் டூப் போடாமல் நடித்துள்ளார் மற்றும் டூப் கலைஞர்களைப் பற்றி என்ன கூறியுள்ளார் என்பதை பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் முரட்டுக்காளை. இப்படத்திற்கு இன்றளவும் பல ரசிகர்கள் உள்ளனர். இப்படத்தில் தென்காசியில் உள்ள ரயில்வே ஸ்டேஷனில் ரயிலில் சண்டை போடுவது போல் க்ளைமாக்ஸ் காட்சியை  படமாக்க திட்டமிட்டுள்ளனர்

ஆனால் தென்காசியில் காலையில் ஒரு ரயில் மற்றும் மாலையில் ஒரு ரயில் வருவது வழக்கம். இந்த இடைப்பட்ட நேரத்தில் ரயில் ஒன்றை வாடகைக்கு எடுத்து கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

rajinikanth
rajinikanth

இதற்கு மட்டும் ஐந்து லட்சம் ரூபாய் அன்றைய காலத்தில் படக்குழுவினர் செலவு செய்தனர். மேலும் ஓடும் ரயிலில் சண்டை போடுவது போல் படமாக்க திட்டமிட்டு இருந்ததால் ஃபைட் மாஸ்டரான ஜூடோ மாஸ்டரும், தயாரிப்பாளரும் டூப் கலைஞர்களை வைத்து கிளைமாக்ஸ் காட்சியை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் அதற்கு ரஜினி சற்றும் சம்மதிக்காமல் ஏன் டுப் போடுபவர்களும் மனிதர்கள் தான் அதனால் நானே ரிஸ்க் எடுத்து அந்த கிளைமாக்ஸ் காட்சியில் நடிக்கிறேன் என கூறிவிட்டு நடித்துள்ளார்.

இப்போதுதான் வயது முதிர்வு காரணமாக அவரை டூப் போட அனுமதிப்பதில்லை. மேலும் டுப் கலைஞர்கள் மீது இவ்வளவு அக்கறை வைத்திருப்பதை பார்த்து பல ரசிகர்களும் ரஜினியை பாராட்டினார்களாம். ரஜினிகாந்தை போல தற்போது வரை எந்த படங்களிலும் டூப் இல்லாமல் தான் நடிப்பேன் என்று தல அஜித் சண்டைக் காட்சிகளில் பிரமிக்க வைத்துள்ளாராம்.

 

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -