ரஜினியை வைத்து படத்தை இயக்கும் தனுஷ்.. படத்தின் கதை இதுதான்

தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். மயக்கம் என்ன 3 போன்று கடினமான படங்களையும் தேர்வு செய்து நடிப்பதில் கெட்டிக்காரர்.

சமீபத்தில் வெளியான வடசென்னை அசுரன் கர்ணன் படங்கள் அவரின் இடத்தை அடுத்தகட்ட உயரத்திற்கு கொண்டு சேர்ததது. நடிப்பு மட்டுமல்லாது பாடகர் பாடலாசிரியர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் தனுஷ்.

தனது மாமனார் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிகராக வைத்து படம் எடுக்க வேண்டும் என்கிற விடயத்தை பல்வேறு விழாக்களில் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார்.ஏற்கனவே தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரன் ரேவதி நடிப்பில் பவர் பாண்டி படத்தை இயக்கினார் அந்த படம் நல்ல விமர்சனத்தையும் நல்ல வசூலையும் பெற்றது.

dhanush-rajini-cinemapettai
dhanush-rajini-cinemapettai

இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீரம் சிவா கூட்டணியில் வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.ரஜினிகாந்தின் நடிப்பில் 168 வது படமான அண்ணாத்த ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளது.

இப்படத்தை தொடர்ந்து 169வது படமும் ஒப்பந்தமான நிலையில் 170 வது படத்தை இயக்க உள்ளார் நடிகர் தனுஷ். இந்த படத்திற்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவரும் தயாரிப்பாளர்களாக களமிறங்க உள்ளனர்.

குடும்பமே சேர்ந்து எடுக்கவுள்ள இப்படம் குடும்ப படமாகவும் இருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.

- Advertisement -