ரஜினியுடன் கதாநாயகி, அக்கா மற்றும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த ஒரே நடிகை இவர்தான்.. நடிப்பின் நாயகியாச்சே!

தமிழ் சினிமாவில் வெகு சில நடிகர்கள் மட்டுமே ரசிகர்களிடம் நீங்காத இடத்தை பிடித்துள்ளனர். அப்படிப்பட்ட நடிகர்கள் தான் ரஜினி மற்றும் ஸ்ரீவித்யா. இவர்களது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ஓரளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாராட்டைப் பெற்றன. அந்த வரிசையில் அபூர்வ ராகங்கள் படத்திற்கு முக்கிய இடமுண்டு.

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் ஆரம்ப காலத்தில் கதாநாயகியாகவும் அதன் பிறகு அடுத்தகட்ட நடிகர்களுக்கு அம்மாவாகவும் நடித்து வந்தனர். ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டுமே ஆரம்ப காலத்தில் கதாநாயகியாக நடித்த நடிகருக்கே அக்கா மற்றும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அந்த வரிசையில் ஸ்ரீவித்யா இடம்பிடித்துள்ளார்.

ஆரம்ப காலத்தில் வில்லனாக நடித்த ரஜினிகாந்திற்கு அதன் பிறகு ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. பின்பு ஒரு கட்டத்திற்கு பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.

ரஜினிக்கு தமிழ் சினிமாவில் ஜோடியாக நடித்த முதல் நடிகை என்றால் அது ஸ்ரீவித்யா தான். அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று அன்றைய கால சினிமா பிரபலங்களிடம் பாராட்டைப் பெற்றது.

பின்பு சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் போக தளபதி படத்தில் அதே ரஜினிக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படத்தில் ஸ்ரீவித்யாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதன் பிறகு பல நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்த ஸ்ரீவித்யா ஒரு சில காலங்களுக்குப் பிறகு உழைப்பாளி படத்தில் ரஜினிக்கு அக்காவாக நடித்தார்.

sridivya-cinemapettai
srividya-cinemapettai

தற்போது ஒரே நடிகருக்கு (அதாவது ரஜினிக்கு) கதாநாயகி, அக்கா மற்றும் அம்மா ஆகிய கதாபாத்திரத்தில் ஸ்ரீவித்யா நடித்துள்ளார். தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -