34 வருடம் கழித்து மீண்டும் ரஜினி நடிக்கும் கதாபாத்திரம்.. அவரே ஆசைப்பட்டு சொன்ன கதை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு இந்த வாரம் டபுள் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒரு சின்ன கிலிம்ஸ் வீடியோவுடன் அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இதை ரஜினி ரசிகர்கள் பயங்கரமாக கொண்டாடி வருகிறார்கள்.

விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிக்கும் இந்த லால் சலாம் திரைப்படத்தை நீண்ட வருடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் முன்னமே வெளியான நிலையில், தற்போது கேரக்டரின் பெயர் மற்றும் தோற்றம் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

Also Read:மறுபடியும் அடித்துக் கொள்ளும் ரஜினி கமல் ரசிகர்கள்.. சும்மா கடந்த சங்கை ஊதிவிட்ட லோகேஷ்

இதில் மொய்தீன் பாய் என்னும் கேரக்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கிறார். முழுக்கை சபாரி சட்டை மற்றும் தலையில் குல்லா என வரும் ரஜினிகாந்தின் இந்த புகைப்படம் ரசிகர்களுக்கு அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை. இதை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றன. மேலும் நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

லால் சலாம் திரைப்படத்தில் முஸ்லிம் கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட 34 வருடங்களுக்குப் முன்பு கமலஹாசன் உடன் இவர் இணைந்து நடித்த அலாவுதீனும் அற்புத விளக்கும் என்னும் திரைப்படத்தில் தான் ரஜினி இஸ்லாம் சமயத்தை சேர்ந்தவராக நடித்திருந்தார். அதன் பின்னர் வேறு எந்த படத்திலும் அந்த கேரக்டரில் நடிக்கவில்லை. 34 வருடங்களுக்குப் பிறகு இவர் நடிக்கும் இந்த கதாபாத்திரம் அவரே ஆசைப்பட்டு சொன்ன கேரக்டராம்.

Also Read:சொந்தமாக சூப்பர் ஸ்டார் தயாரித்த 4 படங்கள்.. மொத்தமாக டெபாசிட் இழந்த பரிதாபம்

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடித்த திரைப்படம் தான் ஜக்குபாய். இந்த படத்தின் கதை முதன் முதலில் ரஜினிகாந்த் ஓகே செய்து நடிப்பதாக இருந்துதான் பின்பு தனிப்பட்ட காரணங்களால் அது சரத்குமாரின் கைவசம் போனது. ஒருவேளை அந்த ஜக்குபாயின் கேரக்டரை கூட லால் சலாம் திரைப்படத்தில் ரஜினி நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ரஜினி இதுபோன்று நிறைய கேரக்டர்கள் தானே ஆசைப்பட்டும் நடித்திருக்கிறார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே ரசிகர்களை இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதிருப்திபடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இதே போன்று தான் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவரை வைத்து படம் பண்ணுகிறேன் என்று ரசிகர்களின் அதிருப்தியை சம்பாதித்தார். லால் சலாம் திரைப்படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெய் பீம் படம் இயக்குனர் ஞானவேல் ராஜாவுடன் இணைந்து படம் பண்ணுவது குறிப்பிடத்தக்கது.

Also Read:ரஜினி மாஸ் படத்திற்கு ரீமேக் செய்ய வாய்ப்பே இல்ல.. கிடுக்கு புடி போட்ட தயாரிப்பாளர்

- Advertisement -