சிகிச்சைக்கு பிறகு வெளியான ரஜினிகாந்தின் முதல் புகைப்படம்.. இந்த மனுஷன இவ்வளவு சோர்வாக பார்த்ததே இல்லை!

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகாலம் நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினிகாந்துடன் போட்டி போட்ட அனைத்து நடிகர்களும் தற்போது தடம் தெரியாமல் போன நிலையில் இன்றும் இளம் நடிகர்களுக்கு செம டஃப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் உருவாகி வந்தது. திடீரென படப்பிடிப்பில் சிலருக்கு கொரானா ஏற்பட்டதால் அந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

மேலும் ரஜினிக்கு ரத்த அழுத்தம் அதிகரித்து ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சமீபத்தில்தான் வீட்டிற்கு வந்தார். ரஜினி அரசியலில் ஈடுபட இருந்த நிலையில் திடீரென உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அரசியல் பயணத்தை ஆரம்பிக்காமலேயே முடித்துக் கொண்டார்.

இது ரஜினியின் ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியை கொடுத்தது. இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உடல்நிலை கருதி அனைத்து ரசிகர்களும் மனதை தேற்றிக் கொண்ட அடுத்தடுத்த வேலைகளை பார்க்க தொடங்கி விட்டனர். சமீபத்தில்கூட ரஜினிகாந்த் மிகவும் சோர்வாக காரிலிருந்து இறங்கி வீட்டிற்குள் செல்லும் வீடியோ ஒன்று பார்க்கும் ரசிகர்களை கண்கலங்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து தற்போது சிகிச்சைக்கு பிறகு ரஜினிகாந்தின் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. எப்போதுமே சுறுசுறுப்பாக இருக்கும் ரஜினியின் முகம் மிகவும் சோர்வாக இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

rajinikanth-cinemapettai
rajinikanth-cinemapettai

வாழ்நாளில் ரஜினிகாந்த் இவ்வளவு சோர்வாக இருந்து யாருமே பார்த்ததில்லை என அனைவரையும் வருத்தப்பட வைக்கும் அளவுக்கு அவரது புகைப்படம் உள்ளது. இருந்தாலும் மீண்டும் அண்ணாத்த சுறுசுறுப்பாக வலம் வருவார் என நம்பலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்