16 வயதினிலே படத்தில் கவுண்டமணிக்கு நடந்த அவமானம்.. 44 வருடங்களுக்கு பின் வெளிவந்த சுவாரசியமான சம்பவம்

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் உயர்ந்த இடத்திற்கு வருவதற்கு முன்னதாக கமலஹாசன் கொடிகட்டி பறந்தவர். அப்படி இருந்த காலகட்டத்தில் வெளிவந்த படம் தான் 16 வயதினிலே.

இந்த படத்தின் படபிடிப்பில் கமல்ஹாசனுக்கு ஏகபோக வரவேற்பு இருக்குமாம். தனி அறை, ஸ்பெஷலான சாப்பாடு, தனி கார் என்று அசத்தி விடுவார்களாம். அதேபோல் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரஜினிகாந்த் மற்றும் கவுண்டமணி சாதாரண துணை நடிகர்களைப் போல கவனிக்க பட்டார்களாம்.

படப்பிடிப்பில் லைட் மெனுக்கு என்ன உணவோஅதைத்தான் இவர்களும் சாப்பிடுவார்களாம். அதே போல் கடைசியில் தான் வீட்டுக்கு செல்வார்களாம், இரவு நேரங்களில் கூட்டத்தோடு கூட்டமாக காரில் செல்ல முடியாமல் வெறுத்துப்போய் நடந்தே கூட வீட்டிற்கு சென்று விடுவார்களாம்.

அந்த அளவிற்கு அவமானங்களை சந்தித்து உள்ளனர் ரஜினிகாந்த் மற்றும் கவுண்டமணி. அப்போது ரஜினிகாந்த் கூறியது அண்ணன் உங்க நடிப்பிற்கு கண்டிப்பாக வரவேற்பு கிடைக்கும், அது வரை போராட வேண்டும் என்று கவுண்டமணியிடம் தெரிவித்தாராம்.

இதனை ஒரு கொரவ பிரச்சனையாக மனதில் வைத்துக்கொண்டு கவுண்டமணி அயராது உழைத்து பல வெற்றிகளை கண்டார். அதன் பின் ஒரு வாரத்திற்கு 7 கார் என்று ஒவ்வொரு நாளும் ஒரு காரில் சூட்டிங் ஸ்பாட் வருவாராம். அந்த அளவிற்கு தனது கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் வெற்றி நடை போட்டவர் தான் கவுண்டமணி.

rajini-goundamani
rajini-goundamani
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்