வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

ரஜினிக்கு பெயர் வாங்கி கொடுத்த பதினாறு வயதினிலே ‘பரட்டை’.. ஸ்ரீதேவியை விட கம்மி சம்பளம் வாங்கிய சூப்பர்ஸ்டார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் , உலக நாயகன் கமலஹாசனும் தமிழ் சினிமாவின் மிகப்பெரும் தூண்களாக இருப்பவர்கள். இன்று புகழின் உச்சியில் இருக்கும் இவர்கள் இருவருமே எண்பதுகளின் காலகட்டத்தில் ஒரே நேரத்தில் ஜெயிப்பதற்காக ஓடிய சமகாலத்து போட்டியாளர்கள். ரஜினியை பொறுத்த வரைக்கும் கமல் படத்தில் வில்லனாக நடித்து, பின் அவருடைய படத்திலேயே இரண்டாவது கதாநாயகனாக நடித்து, பின் தனி ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்தவர்.

ரஜினி மற்றும் கமலஹாசன் இருவருக்குமே அந்த காலத்தில் அதிர்ஷ்டமான ஹீரோயின் என்றால் அது நடிகை ஸ்ரீதேவி தான். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக மாறியவர் ஸ்ரீதேவி. கமல், ரஜினி, ஸ்ரீதேவி கூட்டணியில் ஒரு சில படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்து இருக்கின்றன.

Also Read:2-ம் பாகத்திற்காக காத்திருக்கும் சூப்பர் ஸ்டார்.. படத்தைப் பார்த்து பிரமித்துப்போன ரஜினி

இந்த வரிசையில் மிக முக்கியமான படம் என்றால் அது பதினாறு வயதினிலே தான். இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இந்த படம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தலைகீழாக மாற்றியது என்று தான் சொல்ல வேண்டும். கோலிவுட் சினிமாவை பதினாறு வயதினிலேக்கு முன், பதினாறு வயதினிலேக்கு பின் என பிரித்து விடலாம். இன்று வரை இந்த படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு அடையாளமாக இருக்கிறது.

இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இன்று வரை ‘பரட்டை’ என்ற பெயரும் ரஜினியை விட்டு போகவில்லை. இன்று புகழின் உச்சியில் இருக்கும் ரஜினிகாந்த் அந்த படம் நடிக்கும் பொழுது ஒரு புதுமுக நாயகன் தான். கமல், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் மூவருக்குள்ளும் இருந்த மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால் சினிமா அனுபவம் தான். அப்போதெல்லாம் அனுபவத்தை வைத்து தான் சம்பளம் நிர்ணயிக்கப்படும்.

Also Read:மனிதன் vs நாயகன் உண்மையில் ஜெயித்தது யார்? உண்மையை புட்டு புட்டு வைத்த தயாரிப்பாளர்

அந்த அடிப்படையில் இவர்கள் மூவருக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டது. இதில் கமல் மற்றும் ஸ்ரீதேவியை விட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறைவாக சம்பளம் வாங்கினார். உலக நாயகன் கமலஹாசனுக்கு 27 ஆயிரம் ரூபாய் சம்பளம், நடிகை ஸ்ரீதேவிக்கு 9 ஆயிரம் சம்பளம், ரஜினிகாந்த்திற்கு 3000 சம்பளம். அதாவது ஹீரோயின் ஆக நடித்த ஸ்ரீதேவியை விட மூன்று மடங்கு சம்பளம் குறைவாக வாங்கி இருக்கிறார் ரஜினிகாந்த்.

அதன் பின்னர் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி படிப்படியாக முன்னேறியவர்தான் சூப்பர் ஸ்டார். இன்று நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இவர் ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். மேலும் மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக தன்னுடைய சூப்பர் ஸ்டார் பட்டத்தையும் இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

Also Read:கமலுக்கு நோ சொன்ன ரஜினிகாந்த்.. அதுவும் இந்த டாப் இயக்குனரை நழுவவிட்ட சோகம்!

- Advertisement -

Trending News