21 வருடங்களுக்கு முன்பு டபுள் சம்பளம் கொடுத்த ரஜினி.. ரகசியத்தை உடைத்த தயாரிப்பாளர்!

எளிமை என்றதும் திரையுலகில் நினைவுக்கு வருபவர் நமது சூப்பர் ஸ்டார் தான் அவருடைய எளிமை தான் இன்னும் உச்சத்தில் வைத்திருக்கிறது.

நடிகர் திலகமும் சூப்பர் ஸ்டாரும் இணைந்து நடித்த படையப்பா படத்தை நம்மால் மறக்க முடியுமா? படத்தில் நமக்கு தெரியாத பல ரகசியங்களை போட்டு உடைத்துள்ளார் படத்தின் இணை தயாரிப்பாளர்.

ரஜினி படத்திற்கு போட்ட பட்ஜெட்டை விட குறைவான செலவில் படம் முடிக்கப்பட்டது. படையப்பா படத்திற்காக ஏற்கனவே போட்ட பட்ஜெட்டில் மீதமிருந்த தொகையை படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் பிரித்துக் கொடுக்குமாறு சொன்னாராம் நம் சூப்பர் ஸ்டார்.

இவ்வாறு பிரித்து கொடுத்ததால் அப்படத்தில் நடித்த அனைவருக்கும் “டபுள் சம்பளம்” கிடைத்தது. இவ்வாறு பெருமிதத்துடன் நடந்து கொள்வதால் தான் ரஜினி என்றும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்.

தற்போது அரசியல் வேண்டாம் என்று சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அண்ணாத்தை படப்பிடிப்பு முடிந்து படம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

rajini-padayappa
rajini-padayappa
- Advertisement -