சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

மொத மொதல்ல சினிமால அத உடைச்சது தலைவர் தான்.. ரஜினியின் ரகசியத்தை உடைக்கும் நட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பொறுத்த வரைக்கும் தமிழ் சினிமாவின் அடையாளம் என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட மூன்று தலைமுறை தாண்டியும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தன் கைவசம் வைத்திருக்கிறார். மேலும் இன்று வரை தமிழ் சினிமா மார்க்கெட்டின் நம்பர் ஒன் ஹீரோவாக இவர் தான் இருக்கிறார். கோடிகளில் வசூல் சாதனை செய்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாகி அடுத்த 10 ஆண்டுகளுக்கு பின்னான சினிமா என்பது, ஒவ்வொரு நடிகர்கள், நடிகைகளும் தங்களை ரஜினிகாந்தின் ரசிகராக அடையாளப்படுத்திக் கொள்ளவே ஆசைப்படுகின்றனர். தளபதி விஜய் தொடங்கி தனுஷ் வரை தங்களை ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் என்று பொது மேடைகளில் சொல்லி வருகின்றனர்.

Also Read: திருமணத்திற்கு பின்னும் ரஜினிக்கு தொடர்ந்த பிரச்னை .. பாலசந்தரிடம் சரணடைந்த லதா ரஜினிகாந்த்

அந்த வகையில் ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்னும் நடராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி ஒரு சில விஷயங்களை ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் நட்டி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆரம்ப கால சினிமாவைப் பற்றி ஒரு சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

இப்போதெல்லாம் யார் வேண்டுமானாலும் ஹீரோவாகிவிடலாம், நன்றாக நடிக்கும் திறமை இருந்தாலே போதும் என்றாகிவிட்டது. அதை பற்றி பேசிய நட்டி , அந்த ட்ரெண்டை தமிழ் சினிமாவிற்குள் கொண்டு வந்தது ரஜினி தான். ரஜினிக்கு முன்னால தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு என்று ஒரு சில தகுதிகள் என்று நிறைய விஷயங்கள் பார்க்கப்பட்டது.

Also Read: முதல் சந்திப்பிலேயே லதாவை திணறடித்த ரஜினி.. பிரச்சனைக்குப் பிறகும் கல்யாணத்திற்கு சம்மதிக்க இதுதான் காரணம்

அதாவது ஹீரோ என்றாலே ரொம்ப வெள்ளையாக இருக்க வேண்டும், தாடி கூட வைத்திருக்கக் கூடாது, சிகை அலங்காரம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நிறைய விஷயங்கள் இருந்தது. அதையெல்லாம் தட்டி தூக்கியவர் நம் சூப்பர் ஸ்டார் தான். இவரைப் பார்த்தால் நம் பக்கத்து வீட்டு பையன் போல் இருக்கிறது என்று ரசிகர்கள் முதல் முறை உணர்ந்தது ரஜினியை பார்த்து தான்.

கருப்பு நிறம், பரட்டை தலை, ஸ்டைலாக சிகரெட்டை தூக்கி பிடிப்பது என அதுவரை தமிழ் சினிமா பார்க்காத ஹீரோவாக ரஜினி ரசிகர்களின் கண்களுக்கு தெரிந்தார். அவர் பேச்சு, நடை என அத்தனையிலுமே ஸ்டைல் தான் இருந்தது. இதைத்தான் நடிகர் நட்டி சூப்பர் ஸ்டார் திரைப்படத்தில் மட்டும் அப்படி இல்லை நிஜத்திலும் அப்படித்தான். அவர் படங்களின் நடிக்கவில்லை உண்மையாகவே வாழ்ந்திருக்கிறார் என்று கூட சொல்லி இருக்கிறார்.

Also Read: ரஜினியின் பயோபிக்கில் நடிக்கப் போகும் ஸ்டார் நடிகர்.. கமலின் பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகும் படம்

 

 

- Advertisement -

Trending News