ப்ரோ டாடி பார்த்து மோகன்லாலை போனில் அழைத்த ரஜினி.. ஓஹோ இது தான் காரணமா

மலையாளத்தில் பிரித்திவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால், பிரித்விராஜ், மீனா, கல்யாணி பிரியதர்ஷன், கனிகா, லாலு அலெக்ஸ் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ப்ரோ டாடி. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் மோகன்லால், மீனா இருவரும் கணவன், மனைவி. இவர்களின் மகனாக பிரித்திவிராஜ் நடித்திருந்தார். மோகன்லால் நண்பன் லல்லு அலெக்ஸ் அவர்களின் மகள் கல்யாணி பிரியதர்ஷன். பெங்களூரில் வேலை பார்க்கும் பிரித்திவிராஜ் மற்றும் கல்யாணி இருவரும் குடும்பத்திற்கு தெரியாமல் லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையில் வாழ்கிறார்கள்.

ஆனால் கல்யாணம் ஆகாமல் இளைஞனாக இருக்கும் பிரித்திவிராஜ் ஒரே சமயத்தில் அண்ணனாகவும், அப்பாவாகவும் புரோமோஷன் ஆகிறார். கடைசியில் பிரித்திவிராஜ், கல்யாணியை திருமணம் செய்து கொள்கிறாரா என்பதே ப்ரோ டாடி.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் ப்ரோ டாடி படத்தை பார்த்த பல பிரபலங்களும் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ப்ரோ டாடி படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினர் அனைவரையும் பாராட்டி உள்ளார்.

மலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழில் ரீமேக் செய்யலாம் என்ற திட்டம் ரஜினிக்கு உள்ளதோ என்னவோ. ஆனால் தற்போது வரை ஹீரோ கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வரும் ரஜினிகாந்த், ப்ரோ டாடி படத்தின் தமிழ் ரீமேக்கில் மோகன்லால் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்தால் அவருக்கு மகனாக யார் நடிப்பார் என்பது பெரிய எதிர்பார்ப்பு.

ஆனால் ரஜினி ஒரு நடிகருக்கு அப்பாவாக நடிக்க சம்மதிப்பாரா என்பது சந்தேகம்தான். ரஜினி நடிப்பில் ப்ரோடாடி படம் வெளியானால் நல்ல வரவேற்பை பெறும் என ரஜினி ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், ரஜினி ப்ரோ டாடி தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்