பாண்டியராஜிடம் மன்னிப்பு கேட்ட சூப்பர் ஸ்டார்.. பல வருடம் கழித்து உண்மையை சொன்ன நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றைய தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோவாக இருக்கிறார். எத்தனை ஹீரோக்கள் வளர்ந்து வந்தாலும் இவர் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீசின் மாஸ் ஹீரோ என்றால் அது ரஜினி மட்டும் தான். இன்று வரை ஹீரோவாக மட்டுமே நடித்து வரும் இவருடன் பணிபுரிய இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் காத்துக் கிடக்கின்றனர்.

ரஜினிக்கு எந்த அளவுக்கு பெயரும், புகழும் இருக்கிறதோ அதே அளவுக்கு இவர் ரொம்பவும் எளிமையான மனிதர். எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் ரசிகர்களிடமும், சக கலைஞர்களிடமும் பழகக்கூடிய நடிகர் இவர். இதை நிறைய பேர் தங்களுடைய பேட்டிகளில் சொல்லி இருக்கின்றனர். மேலும் ரஜினியின் இந்த குணத்தை அனைவருமே வியந்து பார்க்கின்றனர்.

Also Read:சொன்ன வார்த்தையை காப்பாற்றிய ரஜினி.. சூப்பர் ஸ்டார் என நிரூபித்த தருணம்

அப்படி ஒரு சம்பவத்தை தான் நடிகர் பாண்டியராஜ் தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும், ஹீரோவாகவும் இருந்தவர். ஹீரோயிசத்தை நகைச்சுவை உடன் கலந்து காட்டக்கூடிய பாண்டியராஜ் இதுவரை ரஜினியுடன் எந்த ஒரு படத்திலும் ஒன்றாக சேர்ந்து பயணித்தது இல்லை.

அப்படி இருக்கும்போது சூப்பர் ஸ்டாருடன் தன்னுடைய அனுபவத்தை பற்றி பகிர்ந்து இருக்கிறார் பாண்டியராஜ். அவர் ஒரு முறை வெளிநாடு செல்ல விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். பாண்டியராஜ் ரஜினியை பார்த்ததும் கையசைத்தாராம். கூட்ட நெரிசலில் ரஜினிகாந்த் வேகமாக நகர்ந்து விட்டாராம்.

Also Read:சிவாஜி ராவை சூப்பர் ஸ்டாராக்கிய முதல் காதல்.. திருமணத்திற்கு முன் ஏற்பட்ட மறக்க முடியாத லவ் ஸ்டோரி

அன்றைய மறுநாளே நடிகர் பாண்டியராஜுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இருந்து போன் அழைப்பு வந்ததாம். அப்போது பேசிய ரஜினி, பாண்டியராஜிடம் விமான நிலையத்தில் அவருடன் பேசாமல் வந்ததற்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டாராம். இது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்ததாம்.

ரஜினிகாந்த் அந்த கூட்ட நெரிசலில் நடிகர் பாண்டியராஜை கண்டுகொள்ளாமல் வந்தது என்பது அவ்வளவு பெரிய விஷயம் இல்லை என்றாலும் அதை மனதில் வைத்து அடுத்த நாளே அவருக்கு போன் செய்து மன்னிப்பு கேட்டது என்பது அவ்வளவு பெரிய நடிகராக இருக்கும் ஒருவர் இதை செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லை ஆனால் ரஜினி அப்படி ஒரு குணம் வாய்ந்தவர் என்று பாண்டியராஜ் சொல்லி இருக்கிறார்.

Also Read:ரஜினியின் ஒரே படத்தால் மூடப்பட்ட தயாரிப்பு நிறுவனம்.. ஒரு வழியாய் அசுரனுக்கு பிறந்த விடிவு காலம்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்