அண்ணாத்த படத்தை வைத்து கொள்ளையடிக்க தியேட்டர்காரர்கள் திட்டம்.. FDFS டிக்கெட் விலை தெரியுமா?

இந்த வருடம் வெளிவந்த தமிழ் படங்களில் தியேட்டர்களில் அதிக நாட்கள் ஓடிய படமாகவும் நல்ல வசூல் செய்த படங்கள் ஆகவும் இருப்பது இளையதளபதி விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் ஆகியவை தான். இந்த இரண்டு படமும் வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளன அதுமட்டுமில்லாமல் தியேட்டருக்கு மக்களை இழுத்து வந்த படங்களாகவும் கருதப்படுகின்றன.

அந்தவகையில் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் அண்ணாத்த படத்தை தியேட்டர்காரர்கள் வெகுவாக எதிர்பார்த்துள்ளனர். அண்ணாத்த படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை ஏற்கனவே கவர்ந்துவிட்டது.

இந்நிலையில் அடுத்ததாக அண்ணாத்த படத்தின் டிரைலரை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். இன்னும் ஓரிரு தினங்களில் அதற்கான அறிவிப்பு வந்து விடும் என்கிறது சினிமா வட்டாரம். இது ஒருபுறமிருக்க தீபாவளி ரிலீஸ் என்பதால் படத்தின் வியாபாரத்தையும் ஆங்காங்கே தொடங்கிவிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

annaatthe
annaatthe

அந்த வகையில் அண்ணாத்த திரைப்படம் பெரும் தொகை கைமாறி உள்ளதாக கூறுகின்றனர். எப்போதுமே ரஜினியின் படங்களுக்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இந்த முறை அமெரிக்காவில் வெளியாகும் ரஜினியின் அண்ணாத்த படத்திற்கு டிக்கெட் விலையாக சுமார் 20 டாலர் உயர்த்தியுள்ளார்கலாம். அதாவது நம்ம ஊர் மதிப்பில் சுமார் 1,400 ரூபாய்.

தமிழ்நாட்டிலும் முதல் நாள் முதல் காட்சி அனுமதி கிடைத்தால் சுமார் ஆயிரம் ரூபாய்க்கு மேல் டிக்கெட் விற்க வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே ரஜினியின் முந்தைய படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் விலை சுமார் ஆயிரம் ரூபாய்க்கு மேல் தான் இருந்தது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் தியேட்டர்காரர்கள் இந்த நடை முறையை கடைபிடிப்பதை அரசாங்கம் எப்போது தட்டிக்கேட்கும் என்பதுதான் தெரியவில்லை.

Next Story

- Advertisement -