ரஜினியை வாயா, போயா என அழைத்த பிரபலம்.. திட்டிய இயக்குனர் பி வாசு-க்கு ரஜினி கூறிய பதில்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக நல்ல வரவேற்பறை பெற்று வருகின்றன.

ரஜினி ரசிகர்கள் அனைவரும் தற்போது அண்ணாத்த திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏனென்றால் பல மாதங்களாக படப்பிடிப்பு நடந்து தற்போது தான் முடிவடைந்துள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ் சினிமாவில் எப்போதும் யாருக்கும் பயப்படாமல் தனது மனதில் பட்டதை பேசக்கூடிய நடிகர் கவுண்டமணி. ரஜினிகாந்த் மற்றும் கவுண்டமணி நடிப்பில் உருவான திரைப்படம் மன்னன்.

rajinikanth goundamani
rajinikanth goundamani

இப்படத்தின் போது கவுண்டமணி பலமுறை ரஜினிகாந்த் வாயா போயா என அழைத்துள்ளார். அதற்கு இயக்குனர் பி வாசு கவுண்டமணியை அழைத்து நீங்கள் என்ன ரஜினிகாந்த் வாயா போயா என அழைக்கிறீர்கள் இதனை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என கூறியுள்ளார்.

இதனை கேட்ட ரஜினிகாந்த் கவுண்டமணி என்னை என்ன வேணாலும் சொல்லி கூப்பிடலாம். அவர் என்னை வாயா போயா என்று கூப்பிட்டாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் அதுமட்டுமில்லாமல் கவுண்டமணி என்னுடைய நண்பன் எனவும் கூறியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்