சார்! பட்டது போதும், இந்த வாட்டி நாங்க சொல்றது தான்.. ரஜினியை மடக்கிய சன் பிக்சர்ஸ்

முன்னணி நடிகர்களின் படங்கள் என்றால் அந்த படத்தில் யார் இயக்குனர் யார் இசையமைப்பாளர் யார் நடிகை என்பதை எல்லாம் அவர்கள்தான் தீர்மானம் செய்வார்கள் எனவும் அதற்கான பட்ஜெட் என்னவானாலும் தயாரிப்பு தரப்பு ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்கிற வழக்கம் சினிமாவில் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஆனால் இப்போதெல்லாம் தயாரிப்பாளர்கள் நடிகர்களை கட்டுப்படுத்த ஆரம்பித்துள்ளது நல்ல முறையாக பார்க்கப்படுகிறது.

தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், ரஜினி, கமல் போன்றோர் தங்களது படங்களில் அதிகம் தலையீடு வைத்து வருவதாக கடந்த சில வருடங்களாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அவர்களே தயாரிப்பாளர்களுக்கு உங்கள் இஷ்டப்படி நடந்து கொள்ளுங்கள் என்று சொல்வது பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் சில சமயங்களில் அவர்களின் தலையீடு இருக்கத்தான் செய்கிறது என்கிறது சினிமா வட்டாரம்.

சரி அண்ணாத்த விஷயத்துக்கு வருவோம். ரஜினி மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தின் பட்ஜெட்டே சுமார் 200 கோடி என்கிறது சன் பிக்சர்ஸ் வட்டாரம். ஆனால் உண்மையில் படம் 200 கோடி வசூலித்து விட்டதா என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

இது ஒரு சில உண்மைகளை வெளியே சொல்ல முடியவில்லை என்பதால் ரஜினியின் அடுத்தபட கால்ஷீட்டையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. ஆனால் இந்த முறை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் ரஜினி படத்தை முழு கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப் போகிறது என்ற தகவல்தான் கோலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னணி நடிகருக்கு இந்த நிலைமையா என்கிற பேச்சு தான்.

அண்ணாத்த திரைப்படம் நினைத்தபடி இல்லாததால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக தாங்கள் தயாரிக்கும் படத்தில் ரஜினியின் சம்பளத்தில் கை வைத்ததோடு மட்டுமல்லாமல் மிகச் சிறிய பட்ஜெட்டில் அந்த படத்தை எடுக்க முடிவு செய்துள்ளார்களாம். அதற்கேற்றபடி இளம் இயக்குனர்கள் யாரேனும் இருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு வாய்ப்பு தருகிறோம் என்று கூறியுள்ளதால் அடுத்த படத்தை கண்டிப்பாக இளம் இயக்குனர் ஒருவர் தான் இயக்குவார் என்கிறார்கள் சினிமா வட்டாரங்கள்.

அதுமட்டுமில்லாமல் ரஜினி சிபாரிசு செய்த பல இயக்குனர்களின் பெயரையும் நிராகரித்து விட்டதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதற்கு காரணம் உங்களுக்கு சம்பளமே ஏகப்பட்டது கொடுக்க வேண்டியிருக்கும் நிலையில் படத்தின் பட்ஜெட்டும் அதிகம் ஆனால் கண்டிப்பாக நஷ்டத்தில் முடியும் என்பதை இப்போதே எனக்கு கண்ணாடி போல் பளிச்சென தெரிகிறது, இதனால் இந்த முறை நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்டால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். ரஜினியும் உங்கள் இஷ்டம் என்று சொல்லிவிட்டாராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்