அவருக்காக எழுதிய கதையில் ரஜினியா.. 28 ஆண்டுகளுக்கு பின் இணையும் காம்போ.

தமிழ் சினிமாவின் தூணாக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஒரு ஹிட் படத்தை கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். ஏனென்றால் சமீபகாலமாக ரஜினி நடிப்பில் வெளியான தர்பார், பேட்ட மற்றும் கடந்த தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த போன்ற படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.

அண்ணாத்த படம் வசூல் பெற்றிருந்தாலும் ரஜினிக்கு திருப்திகரமாக இல்லையாம். அதனால் அவர் எப்படியாவது ஒரு ஹிட் படத்தில் நடிக்க வேண்டும் என மிகவும் கவனமாக கதைகளை தேர்வு செய்து வருகிறார். இந்நிலையில் ரஜினியின் 169வது படத்தை இயக்கப்போகும் அந்த இயக்குனர் யார் என்ற கேள்வி தான் கோலிவுட் முழுவதும் உள்ளது.

இதில் பல இளம் இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டது. இறுதியாக டாக்டர் மற்றும் பீஸ்ட் போன்ற படங்களை இயக்கியுள்ள இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தான் ரஜினி நடிக்க உள்ளார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது ஒரு அதிரடி தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதன்படி பாலிவுட் இயக்குனரான பால்கி இயக்கத்தில் தான் ரஜினி நடிக்க உள்ளாராம். பால்கி சமீபத்தில் சென்னையில் ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கே சென்று நேரில் சந்தித்து கதை ஒன்றை கூறினாராம். இந்த கதைக்கு நடிகர் ரஜினியும் கிட்டத்தட்ட ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த கதையை இயக்குனர் பால்கி அவரது அபிமான நடிகரான அமிதாப் பச்சனுக்காக எழுதி இருந்தாராம். ஆனால் சில காரணங்களால் தற்போது இந்த கதையை ரஜினியிடம் கூறியுள்ளதாக கூறுகிறார்கள். இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் 28 ஆண்டுகளுக்கு பின்னர் ரஜினி – இளையராஜா காம்பே உருவாக வாய்ப்புள்ளது.

ஏனென்றால் பால்கி அவருடைய எல்லா படத்துக்கும் இளையராஜாவையே இசையமைப்பாளராக பயன்படுத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் 169 வது படத்தை இயக்க போவது பால்கியா நெல்சனா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே இந்த குழப்பம் தீரும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்