சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை விட்டுக் கொடுக்காத ரஜினி.. பான் இந்திய படம் என்பதற்காக மட்டுமே செய்த சித்து வேலை

ரஜினி எப்போதுமே சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை விட்டுக் கொடுக்க மாட்டார். ஏனென்றால் அவரது படங்களில் தனி ஸ்டைல் இருக்கும். அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் படம் என்றால் அதில் ரஜினி மட்டும் தான் ஹைலைட்டாக இருப்பார். மற்ற பெரிய நடிகர்களை தன் படத்தில் போட விரும்ப மாட்டார்.

ஆனால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை பார்த்து ரஜினிக்கு நிறைய ஏக்கங்கள் உருவாகியுள்ளதாம். ஏனென்றால் இந்தப் படத்தைப் போல ஒரு இன்டஸ்ட்ரியல் ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக உள்ளார்.

Also Read: வாழ வைத்த தெய்வங்களை வாட்டி வதைக்க முடிவு எடுத்து இருக்கிறாரா ரஜினி.. இளையராஜா போல் மாறிய சூப்பர் ஸ்டார்

மேலும் விக்ரம் படத்தில் கமலை தாண்டி பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா போன்ற பிரபலங்கள் பெயரை வாங்கிச் சென்றார்கள். விக்ரம் படத்தின் ஹிட்டுக்கு இதுவும் ஒரு காரணம் என்று பலர் கூறியுள்ளார்கள். ஜெயிலர் படத்தையும் பான் இந்தியா படமாக ரசிகர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என பல பிரபலங்களை இந்த படத்தில் ரஜினி போட்டு உள்ளார்.

அதாவது கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் போன்றோர்களும் இந்த படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. ஆனால் பேருக்கு தான் ரஜினி அவர்களை பயன்படுத்தி உள்ளாராம். அதாவது மோகன்லால் ஜெயிலர் படத்திற்கு இரண்டு நாள் மட்டும் தான் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

Also Read: சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்டா மட்டும் போதாது.. ரஜினி எடுத்த துணிச்சலான முடிவு, தயக்கம் காட்டிய விஜய்

அதேபோல் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் மூன்று நாட்கள் கால்ஷட் கொடுத்துள்ளார். இதை வைத்து பார்க்கும் போது ஜெயிலர் படத்தில் இவர்கள் சில காட்சிகளில் மட்டுமே வருவார்கள் என்பது தெரிய வந்துள்ளது. ஆகையால் முழுக்க முழுக்க இது ரஜினி படமாக தான் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழி ரசிகர்களை கவருவதற்காக அங்குள்ள பெரிய நடிகர்களை ஜெயிலர் படத்தில் போட்டுள்ளனர். விக்ரம் படத்தை போல் அனைத்து மொழி ரசிகர்களிடமும் ஜெயிலர் படத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக திட்டம் போட்ட ரஜினி காய் நகத்தில் உள்ளார்.

Also Read: ரஜினியின் மூன்று படத்தை ரீமேக் செய்ய ஏங்கும் தனுஷ்.. துரோகத்தால் நிறைவேறாமல் போகும் ஆசை

- Advertisement -