மணிரத்னத்திற்காக விட்டுக் கொடுத்த ரஜினி.. பரபரப்பை கிளப்பிய ஜெயிலர் அப்டேட்

சூப்பர் ஸ்டார் இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த திரைப்படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்னும் சில பல வேலைகள் மட்டுமே பாக்கி இருக்கிறது. அதனாலேயே இப்போது இந்த படத்தின் ரிலீஸ் நாளை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் இப்போது அதில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது ஜெயிலர் பட ரிலீஸ் ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

Also read: எத திருடனும்னு ஒரு விவஸ்தை இல்லையா.? மேடையில் விஜய்யை கிழித்த பயில்வான்

ஏனென்றால் வரும் ஏப்ரல் மாதம் தான் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் 2 வெளியாக இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் இரு வார இடைவெளியில் இந்த இரண்டு படங்களும் மோத இருப்பது சுவாரஸ்யத்தை கூட்டி இருந்தது. அதன்படி ஜெயிலர் ஏப்ரல் 14ஆம் தேதியும், பொன்னியின் செல்வன் 2 ஏப்ரல் 28ஆம் தேதியும் வெளியாக இருந்தது.

ஆனால் அப்படி வெளியானால் அது இரண்டு படங்களுக்குமே சில பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் பொன்னியின் செல்வனுக்கு வழிவிட்டு ஜெயிலர் ரிலீஸ் தள்ளிப் போயிருக்கிறது. இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. அதாவது இந்த இரண்டு படங்களுமே பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது இரு படங்களும் தனித்தனியாக வெளியானால் மட்டுமே அதிக லாபம் பார்க்க முடியும்.

Also read: மனதில் ஒன்றை வைத்து கொண்டு நெல்சனை பாடாய்படுத்தும் சூப்பர் ஸ்டார்.. செய்வதறியாமல் திணறும் நெல்சன்

அதனால்தான் ரஜினி இப்படி ஒரு முடிவுக்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார். அது மட்டுமல்லாமல் மணிரத்னம், லைக்கா நிறுவனர் சுபாஸ்கரன் ஆகிய இருவருமே ரஜினிக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அதன் அடிப்படையில் இந்த ரிலீஸ் தள்ளி போட பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் ஜெயிலர் பட குழுவின் இந்த முடிவு நிச்சயம் புத்திசாலித்தனமானதாகவே பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் இந்த படத்தை எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றி திரைப்படமாக கொடுத்தே தீர வேண்டும் என்ற முடிவில் ரஜினி இருக்கிறார். அதேபோல் கடந்த படத்தில் ஏற்பட்ட விமர்சனங்களை துடைத்து முன்னேற வேண்டும் என்ற வெறியும் நெல்சனுக்கு இருக்கிறது. அந்த வகையில் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வர இருக்கிறது.

Also read: விழி பிதுங்கி நிற்கும் நெல்சன்.. ஜெயிலர் படத்தில் கோர்த்துவிடும் ரஜினி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்