மயில் நடிகையை பெண் கேட்டு சென்ற ரஜினி.. கமலுக்கே இல்ல, உங்களுக்கு எப்படி?

Rajini And Kamal: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுவயதிலிருந்தே தாயில்லாமல் வளர்ந்ததால் அன்புக்காக ஏங்கி இருந்து உள்ளார். ஆகையால் தனக்கு மனைவியாக வருபவரிடம் தாயின் அன்பு கிடைக்க வேண்டும் என எதிர்பார்த்தார். அப்படி ஒரு பெண்ணை தான் தன்னுடன் நடித்த நடிகையிடம் பார்த்திருக்கிறார்.

இதனால் அவர் மீது காதல் வயப்பட்டு நேரடியாக அந்த நடிகையின் வீட்டிற்கே சென்று தாயாரிடம் பெண் கேட்டுள்ளார். ஆனால் அங்கு நடந்த சம்பவத்தினால் நடிகையை மறந்து அதன் பிறகு லதாவை காதலித்து ரஜினி திருமணம் செய்து கொண்டார்.

Also Read : ரஜினியை போட்டு ஆட்டும் கர்மா.. டபுள் மடங்கு சம்பளம், விட்ட இடத்தை பிடித்த உலகநாயகன்

அதுமட்டுமின்றி ரஜினி இடம் இருந்த அனைத்து கெட்ட பழக்கத்தையும் விட லதா முக்கிய காரணம். அதாவது ரஜினி மற்றும் கமலுடன் அதிக படங்களில் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவருடைய படங்கள் அப்போது மிகப்பெரிய வரவேற்பை பெற்று வந்தது.

அந்தச் சமயத்தில் ஸ்ரீதேவி கமல் மீது ஆசைப்பட்டிருக்கிறார். தனது அம்மாவிடம் சொன்னவுடன் நேரடியாகவே கமலை அழைத்து இது குறித்து ஸ்ரீதேவியின் தாயார் பேசியிருக்கிறார். அப்போது கமல் ஸ்ரீதேவியை சிறு வயதில் இருந்து தனக்கு தெரியும். அவரை ஒரு தங்கை போல தான் நினைத்து வந்தேன் என்று கூறினார்.

Also Read : குடும்ப பிரச்சனையா, அரசியல் சதியா.? இரண்டு மாத கருவுடன் உயிர் நீத்த ரஜினி பட ஹீரோயின்

மேலும் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி சென்றுவிட்டாராம். அதன் பிறகு ரஜினி ஸ்ரீதேவியை காதலித்து இருக்கிறார். ஸ்ரீதேவியும் அவரது அம்மாவும் ரஜினியிடம் எப்போதுமே கலகலப்பாக பேசுவார்கள. சரி நேரடியாகவே ஸ்ரீதேவியை பெண் கேட்க சென்று விடலாம் என்று ரஜினி அவர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அந்தச் சமயத்தில் ஸ்ரீதேவி வீட்டில் அபசகுனமாக ஒரு நிகழ்வு நடந்துள்ளது. மேலும் ஸ்ரீதேவி அம்மாவிடமும் தான் அவரை காதலிப்பதாக ரஜினி கூறியிருக்கிறார். ஆனால் அவரோ ஸ்ரீதேவிக்கு இப்போது சினிமாவில் தான் ஆர்வம் இருக்கிறது. ஆகையால் இப்போதைக்கு திருமணம் இல்லை என்று சொல்லி விட்டாராம்.

Also Read : சத்யராஜுக்கு தானாக அமைந்த 5 கேரியர் பெஸ்ட் மூவிஸ்.. ரஜினி கமல் போல் இமேஜ் குறையாத மகா நடிகன்

- Advertisement -spot_img

Trending News